அப்பு மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளகூலிப்படைத் தலைவன் அப்பு மற்றும் போலி குற்றவாளி தில் பாண்டியன் ஆகியஇருவரும் இன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதில் அப்பு மீது குண்டர் சட்டம் பாய்வது இது இரண்டாவது முறையாகும்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அவரது தம்பி ரகு, காஞ்சி மடத்தின் முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர்உட்பட மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜெயேந்திரர் மட்டும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளர்.
இந்த 26 பேரில் ரகு, சுந்தரேச அய்யர், கதிரவன், சின்னா, அம்பிகாபதி, மாட்டு பாஸ்கர், அனில், மீனாட்சிசுந்தரம், குமார், ஆனந்தகுமார்ஆகிய 10 பேர் மீது குண்டர் சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் அப்பு, தில் பாண்டியன் ஆகியோர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவை காஞ்சிபுரம் மாவட்டஆட்சியர் வெங்கடேசன் வெளியிட்டார். இதையடுத்து சங்கரராமன் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைதானவர்களின்எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக அப்புவை ஜெயேந்திரருக்கு எதிராக அப்ரூவராக்க அரசுத் தரப்பு முயன்றது. ஆனால், அப்பு அதற்கு முன் வராததால் அவன் மீதுகுண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளதாகத் தெரிகிறது.
அப்பு மற்றும் தில் பாண்டியன் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு நாளை மறுநாள் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.
தற்போது இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால் அடுத்த ஒரு வருடத்துக்கு இருவரும் ஜாமீனில் கூட வெளியே வரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் கைதான மேலும் சிலர் மீது குண்டர் சட்டம் பாயலாம் என்று போலீஸ் தரப்பு கூறுகிறது.
-
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications