சுனாமி: புலிகளுடன் நார்வே தூதர் ஆலோசனை
கொழும்பு:
சுனாமி நிவாரணப் பணிகளில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளைக் களையும்பொருட்டு, புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனை இலங்கைக்கான நார்வே தூதர் ஹன்ஸ் பிரட்ஸ்கர் ஆலோசனைநடத்தினார்.
கிளிநொச்சியில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின்போது வேறுபாடுகளைக் கடந்து சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தமிழர் பகுதிகளுக்கு கிரீஸ் உதவி:
இதற்கிடையே சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளுக்கு கிரீஸ் நாடு கப்பல் மருத்துமனையை அனுப்பி வைத்துள்ளது.
இது குறித்து இலங்கைக்கான கிரீஸ் நாட்டுத் தூதர் எப்ஸ்டதியோஸ் லோஸோஸ் நிருபர்களிடம் பேசுகையில்,
மிதவை மருத்துவமனையாக மாற்றப்பட்ட கிரீஸ் நாட்டு பயணிகள் கப்பல் ஒன்று திரிகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இந்தக் கப்பலில் 70 உறுப்பினர்கள் அடங்கிய மருத்துவக் குழு உள்ளது.
மெஜஸ்டிக் என்ற தனியார் கப்பல் நிறுவனம், இலங்கையில் சுனாமி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தனது கப்பல்களில் ஒன்றைஇலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கிரீஸ் அரசிடம் தந்தது.
அந்தக் கப்பல் பின்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு இரண்டு வாரங்களுக்கு முன்பு கிரீஸ் நாட்டில் உள்ள பைரஸ் துறைமுகத்தில் இருந்துகிளம்பியது. தற்போது அந்தக் கப்பல் திரிகோணமலையை வந்தடைந்து விட்டது. இந்தத் துறைமுகத்தில் அடுத்த மாதம் 31ம் தேதி வரை இக்கப்பல் நங்கூரமிட்டு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்.
கப்பலில் உள்ள மருத்துவர்கள் திரிகோணமலை அரசு மருத்துவமனையுடன் இணைந்து நிவாரணப் பணிகளில் ஈடுபடுவர். இந்த மிதவைமருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறை, நவீன கருவிகளுடன் மருத்துவ ஆய்வுக்கூடம், எக்ஸ்ரே யூனிட், ரேடியாலஜி யூனிட்ஆகியவை இருக்கிறது.
அதோடு 750 டன் மருத்துவப் பொருட்களும் ஒரு ஆம்புலன்ஸ் வண்டியும் இந்தக் கப்பலில் உள்ளது. கிரீஸ் நாட்டு செஞ்சிலுவைச் சங்கம்நிவாரணப் பணிகளுக்காக 11 பேர் கொண்ட குழுவை இந்தக் கப்பலில் அனுப்பியுள்ளது என்றார்
.கிரீஸ் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், சுனாமி தாக்குதலுக்குப் பின்னர் இலங்கையில் உடனடி நிவாரணப் பணிகளைமேற்கொள்ள விமானங்களை அனுப்பி கிரீஸ் அரசு உதவியது. மேலும் 1,50,000 யூரோ தொகையையும் வழங்கியது. இதுதவிர கிரீஸ்நாட்டு தொண்டு நிறுவனங்களும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications