மாட்டு வண்டி ஓட்டிய வைகோ!
வேடசந்தூர் (திண்டுக்கல்):
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தொடங்கிய மதிமுக விவசாயிகள் மாநாட்டு அரங்கத்திற்கு அக் கட்சியின் பொதுச் செயலாளர்வைகோ மாட்டு வண்டியை ஓட்டி வந்து கலந்து கொண்டார்.
மதிமுக விவசாய அணி சார்பில் 2வது விவசாயிகள் மாநாடு வேடசந்தூரில் தொடங்கியது. இதில் மத்திய நீர் வளத்துறை அமைச்சர்பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மதுரை எம்.பி. பி.மோகன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாடு தொடங்குவதற்கு முன் துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் வைகோ மலர்அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் இரண்டு மாடுகள் பூட்டிய வண்டியில் ஏறி மாநாடு நடக்கும் அரங்கத்திற்குச் சென்றார்.
வைகோ மாட்டு வண்டி ஓட்டி வந்ததைப் பார்த்ததும் தொண்டர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர். வைகோவுக்குப் பின்னால் 20 மாட்டுவண்டிகளில் தொண்டர்கள் வந்தனர். சுமார் 2 கிமீ தூரம் மாட்டு வண்டியை ஓட்டி வந்தார் வைகோ.
மாநாட்டுப் பந்தலின் முகப்பில் குட்டை ரக தென்னை மரங்கள், குலை தள்ளிய வாழை மரங்கள், கரும்பு, நெல், சோளம் ஆகியவற்றைபாதையின் இரு மருங்கிலும் நட்டு வைத்திருந்தனர். அதற்கு மறுமலர்ச்சித் தோட்டம் என்று பெயரிடப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் முன்ஷி பேசுகையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு முழுமையாக செயல்படுத்தும்.தமிழக, கர்நாடக விவசாயிகளின் நலனை மத்திய அரசு கருத்தில் கொள்ளும்.
தமிழக நலனுக்காக குரல் கொடுப்பதில் வைகோதான் முன்னோடியாக திகழ்கிறார். நாடாளுமன்றத்தில் அவரது குரல் கேட்காமல்அனைவரும் அவரை மிகவும் மிஸ் பண்ணுகிறோம். எம்.பியாக இருந்தபோது அவரது முழக்கத்தால் நாடாளுமன்றம் நடுங்காத நாளேஇல்லை என்றார்.
முன்னதாக வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், தரிசு நிலங்களை தனியார் நிறுவனங்களிடம் தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அதற்குப் பதிலாக அவற்றை விவசாயிகளிடம் தந்தால் பொன் விளையும் பூமியாக அதை அவர்கள் மாற்றுவார்கள்.
அவர்களுக்குத்தான் நிலத்தை கொழிக்க வைப்பது எப்படி என்ற ரகசியம் தெரியும். 9ம் தேதி கேரள முதல்வர் உம்மன் சாண்டியைசந்திக்கவுள்ளேன். அப்போது முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து 152 அடி உயரமாக அதிகரிக்கவேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறி அணை உயரத்தை அதிகரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை வைக்கவுள்ளேன் என்றார்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications