தொகுதிகளை மாற்றி அமைப்பதில் விளையாடும் அரசியல்!!
சென்னை:
சட்டசபை தொகுதி மறுவரையறையின்படி தமிழகத்தில் முக்கியத் தலைவர்கள் (குறிப்பாக திமுகவைச் சேர்ந்தவர்கள்) ஜெயித்ததொகுதிகளை தனி தொகுதிகளாக (ரிசர்வ் தொகுதிகளாக) மாற்ற முயற்சி நடப்பதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் தற்போது 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கையை மாற்றாமல், மக்கள் தொகைக்கேற்ப சிலதொகுதிகளைக் குறைத்தும், சில தொகுதிகளைக் கூட்டியும் மறு வரையறை செய்ய மத்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்த மறுவரையறை செய்யும் பணி மாநில தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது மாநில அரசின் கட்டுப்பாட்டில்உள்ளது.
இதுவரை அரசியல் கட்சிகளின் கருத்துக்கள், பொது மக்களின் கருத்துக்கள் எதையும் மாநில தேர்தல் ஆணையம் கேட்கவில்லை.இருப்பினும், அரசியல்ரீதியாக பெரும் மாற்றங்களை எதிர்கால தேர்தல்களில் ஏற்படுத்தும் அளவுக்கு சில மாற்றங்கள் ரகசியமாக நடந்துவருவதாக கூறப்படுகிறது.
குறிப்பிட்ட ஜாதியினரின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் சில தொகுதிகளின் எல்லைகள் மாற்றியமைக்கப்படுவதாகவும்,ஆளுங்கட்சியினருக்கு ஆதரவான பகுதிகளை ஒரே தொகுதியின் கீழ் கொண்டு வரவும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல, திமுக உள்ளிட்ட க்கிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் பல காலமாக போட்டியிட்டு வரும் தொகுதிகளைரிசர்வ் தொகுதிகளாக அறிவிக்கவும் முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது.
திமுகவைச் சேர்ந்த துரைருகன், பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கோ.சி.மணி ஆகியோர் பல காலமாகபோட்டியிட்டும் வரும் தொகுதிகளை தனித் தொகுதிகளாக அறிவிக்க முயற்சி நடப்பதாக திமுகவினர் கூறுகின்றனர்.
அதேபோல, வட தமிழகத்தில் வன்னிய சமூக மக்களின் ஆதரவோடு வென்று வரும் பாமகவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையில் இச்சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை வெவ்வேறு தொகுதிகளில் சேர்த்து அவற்றில் சிலவற்றை ரிசர்வ் தொகுதிகளாக மாற்றவும்முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல, தென் மாவட்டங்களில் தங்களுக்கு ஆதரவான முக்குலத்தோர் சமூகத்தினரின் வாக்குகளை சிதற விடாமல் பார்த்துக்கொள்ளும் வகையிலும் தொகுதி மறு வரையறையை மேற்கொள்ள ஆளுங்கட்சி தரப்பில் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications