கெளசல்யன் உள்பட 5 புலிகள் சுட்டு கொலை
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் முக்கியத் தலைவர்களின் ஒருவரான கெளசல்யன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அவருடன் மேலும் 4 புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
கருணா தலைமையிலான கும்பல் தான் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்பட்டாலும், இந்தக் படுகொலைகளில்ராணுவத்திற்கு தொடர்புள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிழக்கு இலங்கையில் புலிகளின் அரசியல் பிரிவின் முக்கியத் தலைவராக விளங்கியவர் கெளசல்யன். மட்டக்களப்பு-அம்பாறைமாவட்ட பொறுப்பாளராக இருந்தவர்.
நேற்று இரவு 7.45 மணியளவில் சந்திர நேரு என்ற முன்னாள் தமிழ் தேசியக் கூட்டணி எம்.பியுடன் மட்டக்களப்பில் காரில் சென்றகெளசல்யனையும் உடன் வந்த 4 புலிகளையும் கருணா தலைமையிலான படையினர் சுற்றி வளைத்துக் கொன்றதாக ராணுவம்கூறியுள்ளது.
ஆனால், ராணுவத்திற்காக ரகசியமாக பணியாற்றும் ஒரு கும்பல் தான் இந்தப் படுகொலைகளைச் செய்ததாக புலிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இத் தாக்குதலில் சந்திர நேருவும் அவரது மெய்க்காப்பாளர்களான இரு போலீசாரும் டிரைவரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.
10 நிமிட துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னரே கெளசல்யன் மற்றும் 4 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டுள்ளனர். புனனை என்றஇடத்தில் இச் சம்பவம் நடந்தது.
சுனாமி நிவாரணப் பணிகள் குறித்து வன்னியில் இவர்கள் ஆலோசனை நடத்திவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தத்தாக்குதல் நடந்துள்ளது.
இத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் நிதிப் பிரிவுத் தலைவர் தமிழேந்தியும் கொல்லப்பட்டுவிட்டதாக நேற்றிரவில் புரளிகிளம்பியது. இதை திட்டவட்டமாக மறுத்துள்ள புலிகள், தமிழேந்தி கிளிநொச்சியில் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
2002ம் ஆண்டில் புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின் கொல்லப்பட்டுள்ள மூத்த புலித்தலைவர் கெளசல்யனே ஆவார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications