மகளிர் ஆணைய தலைவரானார் கிரிஜா
டெல்லி:
தேசிய மகளிர் ஆணைய தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவரும் சோனியா காந்திக்கு மிக நெருக்கமானவருமான கிரிஜா வியாசும், தேசிய சமூக நல வாரியத் தலைவராக முன்னாள் எம்.பி. ரஜினி பாட்டீலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட பூர்ணிமா அத்வானியின் பதவிக் காலம் கடந்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைடுத்து இந்தப் பதவிக்கு நடிகை ஷபனா ஆஸ்மி, சமூக சேவகி நபீஸா அலி உட்பட பலரது பெயர் அடிபட்டது.
இறுதியில் கிரிஜா வியாஸை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தேர்ந்தெடுத்துள்ளது. இது தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளிவரும்.
கிரிஜா வியாஸ் முன்னாள் மத்திய அமைச்சராகவும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர். கடந்த மக்களவைத் தேர்தலில் உதய்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற கிரிஜா, தற்போது காங்கிரஸ் கட்சியின் செய்திப் பிரிவின் குழுவிற்கு தலைவராக இருக்கிறார்.
தேசிய மகளிர் ஆணையத் தலைவர் பதவி, காபினட் அமைச்சருக்கு இணையான அதிகாரம் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி பாட்டீல்:
இந் நிலையில் மத்திய சமூக நல வாரியத் தலைவராக முன்னாள் எம்.பியும், சமூக சேவகியுமான ரஜினி பாட்டீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் சமூக நல வாரியத் தலைவராக இருந்த மிருதுளா சின்ஹாவின் பதவிக்காலம் கடந்த நவம்பர் மாதம் முடிவடைந்ததையடுத்து ரஜினி பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 3 ஆண்டுகள் இப் பதவியில் நீடிப்பார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications