எஸ்.ஏ. ராஜாவின் ஜாமீன் மனு தள்ளுபடி
மதுரை:
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் கைதான பிரபல கல்வி நிறுவன அதிபர் எஸ்.ஏ. ராஜாவின் ஜாமீன்மனுவை மதுரை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.
ராஜா சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஜாமீன் மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
ஆலடி அருணா கொலை வழக்கை கடந்த டிசம்பர் 31ம் தேதி போலீஸார் பதிவு செய்தபோது அதில் எனது பெயர்குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கில் கைதான வேல்துரை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே எனது பெயர் இந்தவழக்கில் சேர்க்கப்பட்டது. அவரது வாக்குமூலம் தவிர என் மீது குற்றம் சுமத்த எந்த ஆதாரமும் இல்லை.
நானும் ஆலடி அருணாவும் நெருங்கிய நண்பர்கள். கடந்த வருடம் ஜூன் 6ம் தேதி அவரது புதிய கல்லூரி தொடக்க விழாஅழைப்பிதழில் எனது பெயரை சிறப்பு விருந்தினராகக் குறிப்பிட்டுள்ளார். எனவே எங்களுக்கு இடையே போட்டி இருந்ததாகபோலீஸார் கூறுவது தவறு.
நான் இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன். எனவே எனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன்வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கண்ணதாசன், அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். எஸ்.ஏ. ராஜா மதுரையில் தனியார்மருத்துவமனையில் 3 நாட்கள் தங்கி சிகிச்சை பெறவும், அதற்கான பாதுகாப்பு மற்றும் செலவுகளை அவரே ஏற்கவும்உத்தரவிட்டார்.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications