ஜெயேந்திரர்-விஜயேந்திரர் நேருக்கு நேர்!
காஞ்சிபுரம்:
சுமார் 3 மாத இடைவெளிக்குப் பிறகு ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் இன்று காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி ஜெயேந்திரர் கைதான பிறகு அவரை விஜயேந்திரர் சந்திக்கவில்லை. சிறையில் சந்திக்க அவர்விருப்பம் தெரிவித்தபோதும், அதை ஜெயேந்திரர் அனுமதிக்கவில்லை.
இந் நிலையில் இருவரும் இன்று குற்றப் பத்திரிக்கை நகலை பெறுவதற்காக காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்திற்குவந்திருந்தனர். அப்போது இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.
மதியம் 12.05க்கு ஜெயேந்திரர் வந்தார். ஜெயேந்திரரைப் பார்த்ததும் விஜயேந்திரரும் அவரது தம்பி ரகுவும் காலைத் தொட்டு ஆசீர்வாதம்வாங்கிக் கொண்டனர்.
நீதிமன்றத்தில் கிளர்க் மேஜை அருகே ஜெயேந்திரர் நின்று கொண்டார். விஜயேந்திரர் அவருக்குப் பின்புறம் நின்று கொண்டார்.
நீதிமன்றத்திற்குள் இருவரும் பேசிக் கொண்டனர். இதை ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர் ஒருவர் தனது கேமரா செல்போன் மூலம்படமெடுக்க முயன்றார். அதைப் பார்த்து விட்ட நீதிபதி உத்தமராஜன் வழக்கறிஞரின் செல்போனை ஆப் செய்யுமாறு உத்தரவிட்டார்.
நீதிமன்றத்திற்குள் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று விதிமுறை உள்ளது. அதை மீறி படம் எடுப்பது கண்டனத்துக்குரியது. நீதிமன்றவளாகத்திற்குள் புகைப்படம் எடுப்பதை என்னால் அனுமதிக்க முடியாது என நீதிபதி கூறிவிட, அதைத் தொடர்ந்து அந்த வழக்கறிஞர் தனதுசெல்போனை ஆப் செய்து விட்டார்.
குற்றப்பத்திரிக்கை நகல் இன்று வழங்கப்படாது என்று நீதிபதி உத்தமராஜ் அறிவித்தார். இதனையடுத்து 12.45 மணிக்கு ஜெயேந்திரர்,விஜயேந்திரர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தனர்.
முன்னதாக காஞ்சி மடத்தின் முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர், ரகு ஆகியோரை அவர்களது வழக்கறிஞர்கள் சந்திக்க நீதிபதி அனுமதிவழங்கினார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications