ஐநா பாதுகாப்பு சபை: இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்க எம்பி
வாஷிங்டன்:
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்பிராங்க பல்லோன் அந் நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு இந்தியா, உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வருகிறது. பாதுகாப்பு சபையில்நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவும், சீனாவும் இது தொடர்பாக மெளனம் காத்து வருகின்றன. இந் நிலையில் பல்லோன், சென்ஸ் ஆப் காங்கிரஸ் என்றபெயரில் சில தீர்மானங்களை அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளார். அதில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ஆதரவுதெரிவிக்கும் தீர்மானமும் அடக்கம்.
இந்தத் தீர்மானங்கள் அமெரிக்க நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தாது என்றாலும், இது தொடர்பாக வலுவான கவனத்தை அது கொண்டு வரும்.
தீர்மானத்தில் பல்லோன் கூறியிருப்பதாவது:
இந்தியா பொருளாதார ரீதியில் வலுவான நாடாக மாறி வருகிறது. எனவே ஐ.நா. பாதுகாப்பு சபையில் எந்த ஒரு மாற்றத்தைஏற்படுத்தும்போது, இந்தியாவிற்கு நிரந்த உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதைத் தவிர்க்க முடியாது.
இது நமது நாட்டின் விருப்பத்தில்தான் உள்ளது. இந்தியா நிரந்தர உறுப்பு நாடாவதை நாம் உறுதி ச்ெயய வேண்டும். உலக நாடுகளுடானஉறவில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றி வரும் நிலையில், இந்தியா போன்ற நாடுகளை நாம் கட்டாயம் அங்கீகரிக்க வேண்டும்.
1942ல் ஐ.நா. சபை தோற்றுவிக்கப்பட்டபோது அதில் 51 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன. இப்போது அது 200த் தாண்டியுள்ளது.ஆனால் பாதுகாப்பு சபையில் மட்டும் எந்தவொரு மாற்றமும் இல்லை.
பாதுகாப்பு சபையை விரிவுபடுத்த முடியாமல் இருப்பது, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் அதன் திறனைபலவீனப்படுத்துகிறது.
ஜனநாயகம், பன்முகத்தன்மை, ராணுவ பலம் ஆகிய தகுதிகளுடன் இருக்கும் நாடுகளை பாதுகாப்பு சபையில் சேர்ப்பதன் மூலமே, சர்வதேசபயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்காவும், உலக நாடுகளும் போராட முடியும்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்தபோது, பயங்கரவாதத்தால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகிவரும் இந்தியாதான் முதலில் உதவிக் கரம் நீட்டியது.
எனவே ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவளிக்க வேண்டும் என்ற கூறியுள்ளார்.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications