விஜயேந்திரர் ஜாமீனில் விடுதலை: சென்னையில் தங்க உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Vijayendrarசங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் தான் தங்கியிருக்க வேண்டும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகிகையெழுத்திட வேண்டும் மற்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் ஆகிய நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் கடந்த மாதம் 10ம் தேதி விஜயேந்திரர் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த வழக்கில் ஜாமீன் கோரி செங்கல்பட்டு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விஜயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடிசெய்யப்பட்டது.

இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விஜயேந்திரர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிதணிகாச்சலம் விசாரித்தார். இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, விஜயேந்திரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவர் தனதுதீர்ப்பில்,

ஜெயேந்திரர் மீது சாட்டப்பட்ட அளவுக்கு விஜயேந்திரர் மீது அரசுத் தரப்பே குற்றம் சாட்டவில்லை. இவர் மீதான வழக்கு வலுவானதாகஇல்லை. இதனால் அவருக்கு ஜாமீன் வழங்குகிறேன்.

அதே நேரத்தில் இவர் வெளியில் வந்தால் சாட்சிகளைக் கலைப்பார் என போலீஸார் அச்சம் தெரிவிப்பதால், சாட்சிகளை சந்தித்துப்பேசவோ, கலைக்கவோ மாட்டேன் என்ற உத்தரவாதம் அடங்கிய ஒரு பிரமாண வாக்குமூலத்தை செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில்விஜயேந்திரர் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுகிறேன்.

ஜாமீனில் வெளியில் வரும் விஜயேந்திரரர் சென்னையில் தான் தங்கியிருக்க வேண்டும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி, கையெழுத்திட வேண்டும். தனது பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க வேண்டும் என்றார் நீதிபதி.

நாளை விடுதலை?:

இந் நிலையில் குற்றப் பத்திரிக்கை நகலை வாங்குவதற்காக காஞ்சிபுரம் நீதிமன்றத்திற்கு வந்த விஜயேந்திரரை அவரது வழக்கறிஞர்சண்முகம் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,

விஜயேந்திரரிடம் 5 நிமிடம் பேசினேன். அப்போது அவருக்கு ஜாமீன் கிடைத்த தகவலை சொன்னேன். அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை சென்னையில் உள்ள எங்களது வழக்கறிஞர்கள் பெற்று செங்கல்பட்டு வருவார்கள். பின்பு செங்கல்பட்டு செஷன்ஸ்நீதிமன்றத்தில் ரூ.50,000க்கான ஜாமீன் மற்றும் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்படும்.

இன்று மாலை 5.30 மணிக்குள் ஜாமீன் உத்தரவை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் பெற்றுவிட்டால் அதை உடனடியாக சென்னை மத்தியசிறையில் ஒப்படைப்போம். நாளை காலை விஜயேந்திரர் விடுதலையாவார் என்றார்.

தங்குமிடம் தயார்:

இதற்கிடையே ஜாமீனில் வெளிவரும் விஜயேந்திரர், கீழ்ப்பாக்கத்தில் உள்ள மக்கள் ஜன சபை, சேத்துப்பட்டு ஹாரிங்க்டன் சாலையில்உள்ள சங்கர மடத்தின் கிளை அலுவலகம், சங்கர நேத்ராலாயா மருத்துவமனைக்குச் சொந்தமான பங்களா இதில் ஒன்றில் தங்குவார் என்றுதெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+