ஆடிட்டர் குருமூர்த்தி தலைமறைவு; கைது செய்ய போலீஸ் வலைவீச்சு!
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் ஆடிட்டரும், சுதேசி ஜன் ஜாக்ரன் மஞ்ச் தலைவருமான எஸ்.குருமூர்த்தியைக் கைது செய்ய காஞ்சிபுரம்தனிப்படை போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டார்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கானோரிடம் காஞ்சிபுரம் காட்டுப்பங்களாவில் வைத்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர்.
அவர்களில் குருமூர்த்தியும் ஒருவர். பிரபல ஆடிட்டரான குருமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ் ஆதரவு சுதேசி ஜன் ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பின்தலைவராகவும் இருந்து வருகிறார்.
சங்கரராமன் கொலையில் அவருக்கும், சங்கர மடத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்து தனிப்படை போலீஸார் காட்டுப்பங்களாவில்வைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை தனக்குத் தருமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் குருமூர்த்தி பின்னர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந் நிலையில் கடந்த 9ம் தேதி காஞ்சிபுரம் முதலாவது நீதிமன்றத்தில் கூடுதல் எஸ்.பி. சக்திவேல் ஆஜராகி, சங்கரராமன் கொலை வழக்கில்போலீஸாரை திசை திருப்பும் வகையில் பல தவறான தகவல்களை குருமூர்த்தி தந்துள்ளார். எனவே அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவரைக் கைது செய்ய அனுமதி கோரினார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி உத்தமராஜ் குருமூர்த்தியைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தார். இந் நிலையில் குருமூர்த்தி தற்போதுதலைமறைவாகி விட்டார். அவரைக் கைது செய்ய காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் தனிப்படைகளை அமைத்துள்ளதாகத் தெரிகிறது.
குருமூர்த்திக்கும் ஜெயேந்திரர் மற்றும் சங்கர மடத்திற்கு இடையே மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. சங்கர மட கணக்குகளையும்குருமூர்த்தி பல முறை ஆடிட் செய்துள்ளார். ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றின் ஆஸ்தான ஆடிட்டராகவும், எழுத்தாளராகவும் அவர் இருந்துவருகிறார்.
சங்கரராமன் கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் குருமூர்த்திக்கு போலீஸார் வலை விரித்திருப்பதுபுதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications