வாசன் மத்திய அமைச்சராகிறார்?
டெல்லி:
தமிழக காங்கிரஸ் தலைவர் வாசனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு பதவிக்கு வந்தது. இதுவரை மத்திய அமைச்சரவையில்பெரிய அளவிலான மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இடையில் சிபுசோரண் பதவி விலகினார். பின்னர் மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.
இந் நிலையில் சில புதிய அமைச்சர்களை அமைச்சரவையில் சேர்க்க சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் முடிவு செய்துள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜீவ் காந்திக்கு மிக நெருக்கமான நண்பரான கேப்டன் சதீஷ் சர்மா, தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் மத்தியஅமைச்சர் மாதவராவ் சிந்தியாவின் மகன் ஜோதிர் ஆதித்யா ஆகியோரது பெயர்கள் அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகக்கூறப்படுகிறது.
வாசன் மத்திய அமைச்சராவது உறுதி என்று அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்தில் உறுதியாகக் கூறப்படுகிறது. மத்திய அமைச்சரானாலும்கூட தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலும் வாசனே தொடர்ந்து நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல, சரிவர செயல்படாத சில அமைச்சர்களை கழற்றி விடவும் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. வருகிற 17ம்தேதி வாக்கில் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications