வீரப்பன்: ஆர்.டி.ஓ.விடம் முத்துலட்சுமி மனு
தர்மபுரி:
வீரப்பன் உடலை தோண்டியெடுத்து மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தர்மபுரிவருவாய் கோட்டாட்சியரிடம் (ஆர்.டி.ஓ.) மனு கொடுத்துள்ளார்.
வீரப்பன் கொல்லப்பட்டது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது. முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில்இரண்டாவது கட்ட விசாரணை தொடங்கியது.
வீரப்பன் உடலில் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்கள், அப்போது உடனிருந்த போலீஸ் அதிகாரிகள், மருத்துவமனை ஊழியர்கள்உள்ளிட்டோரிடம் ஆர்.டி.ஓ. பிரகாசம் விசாரணை நடத்தினார்.
விசாரணையின்போது வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும் வந்திருந்து ஆர்.டி.ஓவிடம் மனு ஒன்றை அளித்தார். பின்னர் வெளியில் வந்தமுத்துலட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தர்மபுரி பாப்பாரப்பட்டி சாலையில் எனது கணவர் வீரப்பன் மற்றும் 3 பேரை சுட்டுக் கொன்றதாக அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார்கூறுகிறார்.
அக்டோபர் 19ம் தேதி காலையிலேயே தருமபுரி அரசு மருத்துவமனைக்கு வந்த என்னை தனி அறையில் போலீஸார் வைத்திருந்தனர்.மாலையில்தான் எனது கணவரின் உடலைக் காட்டினர். பிரேதத்தைப் பார்க்கவோ, தொடவோ அவர்கள் அனுமதிக்கவில்லை.
மேலும் மத வழக்கப்படி எனது கணவரின் உடலுக்கு சடங்குகள் செய்யவும் போலீஸார் அனுமதிக்கவில்லை. சடலத்தை எரிப்பதிலேயேஅவர்கள் குறியாக இருந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 20ம் தேதி சடலத்தை அடக்கம் செய்ய அனுமதித்தனர்.
அவரது நெற்றியில் மிக அருகில் இருந்து சுட்டது போல காயம் உள்ளது. ஆனால் உடலில் வேறு எங்கும் காயம் இருந்தது போலத்தெரியவில்லை. மருத்துவ பரிசோதனையில் பல குறைபாடுகள் தெரிகின்றன. முழுமையான பிரதேப் பரிசோதனை செய்யப்படவில்லை.
எனது கணவரின் உடலை வெளி மாநில டாக்டர்களை வைத்து மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். நாங்கள் நியமிக்கும் டாக்டர்உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்.டி.ஓவிடம் வைத்துள்ளேன் என்றார் முத்துலட்சுமி.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications