ஸ்ரீனிவாச்சார் கொலை: போலீஸ் பாட்னா விரைவு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் உத்திராதி மட மேலாளர் ஸ்ரீனிவாச்சார் கொலை தொடர்பாக குற்றவாளிகள் பீகார் தலைநகர் பாட்னாவில் பதுங்கியிருப்பதாககிடைத்த தகவலின் பேரில் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் பாட்னா விரைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்குப் பின்புறம் உத்திராதி மடம் உள்ளது. இந்த மடத்தில் மேலாளராக இருந்து வந்த பீகாரைச்சேர்ந்த ஸ்ரீனிவாச்சார் கடந்த 20ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
இக்கொலை தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வந்தது. மடத்திற்குச் சொந்தமான நிலத்தை விற்பதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் ஸ்ரீனிவாச்சார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாருக்குத் தெரிய வந்தது.
இந் நிலையில் ஸ்ரீனிவாச்சாரைக் கொலை செய்த கும்பல் பீகார் தலைநகர் பாட்னாவில் பதுங்கியிருப்பதாக காஞ்சிபுரம் போலீஸாருக்குத்தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கமர்சிங் தலைமையிலான 6 பேர் கொண்டதனிப்படை போலீஸார் பாட்னா விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications