கோவை குண்டுவெடிப்பு தினம்: போலீஸ் உஷார்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை நகரில் குண்டுவெடிப்பு நடந்ததன் 7வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நகர் முழுவதும் போலீஸார் உஷார் நிலையில்வைக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாநகரில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 50க்கும் மேற்பட்டோர்பலியாயினர். இந்த சம்பவம் நடந்து நாளையுடன் 7 ஆண்டுகள் ஆகிறது.
இதைத் தொடர்ந்து நகர் முழுவதும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையம், ரயில் நிலையம், பஸ்நிலையங்கள் மற்றும் கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டு தீவிரகண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நகரின் அனைத்து எல்லைகளிலும் தீவிர வாகனச் சோதனையிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications