பாமகவுடன் உறவு ஏன்? திருமா. விளக்கம்
விருத்தாச்சலம்:
உழைக்கும் மக்களாகிய வன்னியர்களும், தலித்துகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதன் காரணமாகவே பாமகவும், விடுதலைச்சிறுத்தைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன்கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் பாலக்கரை, ஆயியார் மண்டபம், கார்குடல் உள்ளிட்ட பல இடங்களில் நடந்த கொடியேற்றுநிகழ்ச்சிகளில் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில்,
தலித்துகளும், வன்னியர்களும் உழைக்கும் மக்கள். இவர்கள் மோதல் போக்கைக் கைவிட்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றதொலைநோக்குப் பார்வையில்தான் பாமகவுடன், விடுதலைச் சிறுத்தைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
இத்தனை காலம் நீதிமன்றம், வழக்கு, சிறைச்சாலை என்று அலைந்து திரிந்தது போதும். இனியும் அது நீடிக்கக் கூடாது. இவ்விருசமுதாயமும் இணைந்தால்தான் முன்னேற்றம் வரும்.
நாங்கள் மேற்கொண்டிருப்பது தமிழ் தேசிய அரசியல். இதன் அடிப்படையில்தான் பாமக, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன்விடுதலைச் சிறுத்தைகள் கைகோர்த்துள்ளது என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications