காவல் நிலையத்தில் கையெழுத்து போட்ட விஜயேந்திரர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உயர் நீதிமன்ற நிபந்தனையின்படி சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் விஜயேந்திரர் இன்று ஆஜராகி கையெழுத்திட்டார்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீனில் விடுதலையாகியுள்ள விஜயேந்திரர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள காஞ்சி சங்கரமடத்திற்குச் சொந்தமான பங்களாவில் தங்கியுள்ளார்.
இந் நிலையில் உயர் நீதிமன்ற நிபந்தனைப்படி இன்று காலை 10 மணிக்கு ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் அவர் ஆஜரானார். பின்னர்காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முன்னிலையில் அவர் கையெழுத்துப் போட்டார். பின்னர் அங்கிருந்து மீண்டும் கிரீன்வேஸ் சாலைக்குத்திரும்பினார்.
விஜயேந்திரர் வருகையையொட்டி ஆயிரம் விளக்கு காவல் நிலையப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications