ரவி சுப்பிரமணியத்தை மிரட்டிய சங்கர மட பெண் வழக்கறிஞர்கள்!
காஞ்சிபுரம்:
அப்ரூவராகிவிட்ட ரவி சுப்பிரமணியத்தை மிரட்டியதாக சங்கர மடத்தின் வழக்கறிஞர்கள் நான்கு பேர் மீது காஞ்சிபுரம் தனிப்படைபோலீஸார் வழக்குப் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியம் அப்ரூவர் ஆகிவிட்டார். அவரது வாக்குமூலம் ஜெயேந்திரர் தரப்பைபோலீசாரிடம் வசமாக மாட்டிவிட்டுள்ளது.
இதனால் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து ரவி விடுவிக்கப்பட்டுவிட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தொடர்ந்து காஞ்சிபுரம்கிளைச் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிநலையில் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜனிடம் தனது கைப்பட எழுதிய மனு ஒன்றை ரவி சுப்பிரமணியம்கொடுத்துள்ளார்.
அதில், பிப்ரவரி 1ம் தேதி சங்கர மடத்தின் வழக்கறிஞர்களான தியாகராஜன், சண்கமும் ஆகியோரது சார்பில் பெண் வழக்கறிஞர்களானநசீமா பானு, ரேவதி ஆகியோர் என்னை சிறையில் வந்து சந்தித்தனர்,
அப்போது, ஜெயேந்திரருக்கு எதிராக கோர்ட்டில் வாக்குமூலம் கொடுத்தால் சிறையை விட்டு உயிரோடு வெளியே போக முடியாது என்றுமிரட்டி விட்டுச் சென்றனர். எனவே எனக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் ரவி கூறியுள்ளார்.
இதையடுத்து வழக்கறிஞர்கள் தியாகராஜன், சண்முகம் மற்றும் ரேவதி, நசீமா பானு ஆகியோர் மீது காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
ஆனால் ரவி சுப்பிரமணியத்தின் புகாரை ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் மறுத்துள்ளனர். இதுகுறித்து தியாகராஜனும் சண்முகமும்கூறுகையில், நீதிமன்றம் அல்லது அரசு அனுமதி பெறாமல் யாரையும் வழக்கறிஞர்கள் பார்க்க முடியாது. அப்படியே பார்த்தாலும், சிறைக்கண்காணிப்பாளர் முன்னிலயிைல்தான் பேச முடியும்.
ரவி சுப்பிரமணியம் சொல்வது போல அவர் அடைக்கப்பட்டிருக்கும் அறைக்கே சென்று மிரட்டி விட்டு வர முடியாது என்றனர்.
முன்னதாக, குருமூர்த்தியின் ஆலோசனையின் பேரில் சங்கர மட வழக்கறிஞர்கள், ரவி சுப்பிரமணியத்தின் வக்கீல்களுடன் பேசி அவரதுஅப்ரூவர் வாக்குமூலத்தை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது நினைவிருக்கலாம்.
இதையடுத்தே குருமூர்த்தி மீது பாய்ந்தது காஞ்சி போலீஸ்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் சார்பாக ஆஜராகி வரும் முக்கியமான வழக்கறிஞர்கள் தியாகராஜனும், சண்முகமும்.
இப்போது அவர்களைக் குறி வைத்தே காஞ்சிபுரம் போலீஸார் காய் நகர்த்துவது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications