ஜெயேந்திரர் கைது: கிருஸ்தவ அமைப்புகளின் சதி என்கிறார் சு. சுவாமி
கலவை:
கிருஸ்தவ அமைப்புகளின் சதி காரணமாகவே ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம்சுவாமி கூறியுள்ளார்.
கலவையில் ஜெயேந்திரரை, சந்திரலேகாவுடன் சென்று சந்தித்துப் பேசிய சுவாமி பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையில் விஜயேந்திரரை சந்தித்தேன். இப்போது ஜெயேந்திரரை தரிசித்துள்ளேன். ஜெயேந்திரர் மீது பொய் வழக்குபோடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நேரடி ஆதாரம் எதுவுமில்லை என்று நீதிமன்றமும் கூறி வருகிறது. எனவே ஜெயேந்திரர் மீதான வழக்குதோற்றுப் போகும்.
இத்தகைய பொய் வழக்கு போட்ட காவல்துறை அதிகாரிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 358வது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.மேலும், ஜெயேந்திரர் மற்றும் மடத்தின் பெயரைக் கெடுத்ததற்காக முதல்வர் ஜெயலலிதா மீது ரூ. 100 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்குதொடரலாம்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நிர்பந்தம் காரணமாக ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரிய கிருஸ்துவ அமைப்புகள்சேர்ந்து இந்த சதியை செய்துள்ளன.
தர்மத்தை கெடுக்கவும், இந்து மதத்தை கேவலப்படுத்தவும் சர்வதேச அளவில் சதிச் செயல் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது மக்கள்ஆதாரவு இல்லாததால் அந்தச் சதி தோற்று விட்டது. ஜெயேந்திரர் கைது காரணமாக ஜெயலலிதாவின் எதிர்காலம் நிச்சயம் பாதிக்கும்.
பெங்களுருக்கு வந்த அமெரிக்கா நாட்டு மதப் பிரசாரகர் பெனின் 3 நாள் இந்தியாவில் தங்க அனுமதிக்கப்பட்டது. மூட நம்பிக்கைகளைபரப்புவதாக அமெரிக்காவிலேயே அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அப்புறம் ஏன் அவரை இந்தியாவுக்குள் விட்டார்கள்?
ஜெயேந்திரர் கைதைக் கண்டித்து விடுதலை புலிகள் ஆதரவில்லாத தலித் அமைப்புகளுடன் ஜனதாக் கட்சி, வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ்.,நடராஜனின் வன்னியர் அமைப்பு ஆகியவை சேர்ந்து போராட்டம், மற்றும் பொதுக் கூட்டம் நடத்த ஆலோசனை நடத்தி வருகிறோம்என்றார் சுவாமி.
ராஜிவ் காந்தி ஆட்சியில் இருந்தபோது சங்கர மடத்துக்கு பல தொல்லைகள் தந்ததும் இதே சுப்பிரமணியம் சுவாமி தான் என்பதுகுறிப்பிடத்தக்கது. சங் பரிவார் அமைப்புகளை எதிர்த்தும் வந்தார். தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளுடன் மாறி, மாறி நட்பு பாராட்டியசுவாமி இப்போது ஜெயேந்திரருக்கும் சங் பரிவாருக்கும் ஆதரவான நிலையை எடுத்துள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications