குருமூர்த்தியை பழிவாங்க போலீஸ் முயற்சி: சுதேசி ஜாக்ரன் மன்ச்
டெல்லி:
குருமூர்த்தி மீது தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு சுதேசி ஜாக்ரன் மன்ச் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக உள்ள குருமூர்த்தியை கைது செய்ய காஞ்சி போலீஸ் படை முயன்று வருகிறது. ஆனால், அவர்தலைமறைவாக இருந்து வருகிறார். சங்கரராமன் கொலை வழக்கை திசை திருப்பும் வகையில் த நியூ இந்தியன் எக்ஸ்பிரசில் கட்டுரைகள்எழுதியதாக அவர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.
இந்தக் கட்டுரையை வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் மனோஜ் குமார் சொந்தாலியா, தமிழில் அதை வெளியிட்ட துக்ளக்ஆசிரியர் சோ ஆகியோரிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர்.
இந் நிலையில் ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட சுதேசி ஜாக்ரன் மன்ச் அமைப்பின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் முரளீதர் ராவ்வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சங்கரராமன் கொலை வழக்கில் போலீசாரின் விசாரணையில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டியும், விசாரணை செல்லும் பாதையைவிமர்சித்தும் கட்டுரைகள் எழுதியதற்காக அவரைப் பழிவாங்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.
சங்கர மடத்தின் மீதும் சங்கராச்சாரியார்கள் மீதும் தமிழக போலீசாருக்கு உள்ள வன்மம் இதன் மூலம் வெளிப்படையாகிவிட்டது.
போலீசாரின் தவறுகளை குருமூர்த்தி மேலும் வெளிப்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத் தான் அவரை போலீஸ் நெருக்கடி தந்துதுன்புறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தை நாங்கள் மக்களிடம் எடுத்துச் செல்வோம். தமிழக அரசின் செயல்களை வெட்டவெளிச்சமாக்குவோம் என்று கூறியுள்ளார் ராவ்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications