நீதிபதி ராமன் மருமகன் கொலை: விசாரணை தொடக்கம்
திருச்சி:
வெங்கடேச பண்ணையார் கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ராமனின் மருமகன் வெங்கடேசன் சுட்டுக் கொல்லப்பட்டவழக்கு விசாரணை திருச்சி விரைவு நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.
நாடார் இளைஞர் பேரவைத் தலைவரான வெங்கடேச பண்ணையார் சென்னையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்துவிசாரிக்க நீதிபதி ராமன் தலைமையில் ஒரு நபர் கமிஷனை அரசு நியமித்தது.
ஆனால், ராமன் கமிஷன் நியமிக்கப்பட்ட சில நாட்களிலேயே, அதாவது கடந்த 2003ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி, ஸ்ரீரங்கத்தில்வசித்து வந்த அவரது மருமகன் வெங்கடேசன், தனது வீட்டில் வைத்தே சுடப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீரங்கம்போலீஸார் பதிராஜ், அவரது சகோதரர் ராஜ் பிரபு, தவசி, அருண், வீரமணி, வசந்த்ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த நெட்டை ரவி, தாமோதரன் ஆகியோர்தூத்துக்குடி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்தக் கொலை வழக்கு விசாரணை புதன்கிழமை (நேற்று) திருச்சி மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் தொடங்கியது. குற்றவாளிகள் 8 பேரும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கில், அப்போதைய திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மணிவாசன், அப்போதைய நான்காவது குற்றவியல் நீதிபதிராஜமாணிக்கம், வெங்கடேசனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் உள்ளிட்ட 55 பேர் அரசுத் தரப்பு சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெங்கடேசனின் தாயார் பத்மா, மனைவி ஸ்ரீபிரியா, சகோதரர் வம்சிஸ்ரீதர் ஆகியோரும் கோர்ட்டில் ஆஜராகியிருந்தனர்.
மிக முக்கியமான வழக்கு என்பதால் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விசாரணைக்குப் பின் குற்றவாளிகள் பதிராஜ், ராஜ்பிரபு ஆகிய இருவருக்கும் திருச்சி மத்திய சிறையில் முதல் வகுப்பு வசதிகள் அளிக்கப்படவேண்டும் என நீதிபதி ஜோனதன் ஞானய்யா உத்தரவிட்டார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications