சென்னை போலீஸ் கமிஷ்னர் கட்டுப்பாட்டில் செங்கை கிழக்கு மாவட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னைப் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய செங்கை கிழக்கு காவல்துறை மாவட்டத்தை சென்னை மாநகர காவல்துறையுடன் இணைக்கமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சென்னையின் மீனம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகள் செங்கை கிழக்கு மாவட்டத்தின் கீழ் தான் இருந்து வந்தன.

இந் நிலையில் சென்னை பெருநகர காவல்துறையின் எல்லை விரிவாக்கப்பட்டு, அதில் செங்கை கிழக்கு மாவட்டமும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா இன்று பிறப்பித்தார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில்,

தமிழக காவல் துறையினரின் சிறப்பான செயல்பாட்டினால் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது.

தலைநகர் சென்னையில் வாகனப் பெருக்கம், தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு, விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டநிறுவனங்களின் பெருக்கம், மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவற்றினால் ஏற்படும் சிக்கல்களை சென்னை காவல்துறை மிகவும் சிறப்பாகசமாளித்து வருகிறது.

சென்னைப் புறநகர்ப் பகுதியில் விமான நிலையம், பெரும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை உள்ளன. மேலும் இங்கு மக்கள் தொகைப்பெருக்கமும் அதிகரித்து வருகிறது. ஏராளமான மக்கள் சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் குடியேறி வருகிறார்கள். சென்னை நகருக்குஇணையான மக்கள் தொகை சென்னைப் புறநகர்ப் பகுதிகளிலும் உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டும், இப் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையிலும் புறநகர்ப் பகுதிகளைஉள்ளடக்கிய செங்கை கிழக்கு மாவட்டத்தை சென்னை மாநகர காவல்துறையுடன் இணைக்க உத்தரவிட்டுள்ளேன்.

இதன் மூலம் சென்னை மாநகர காவல்துறையின் எல்லை வடக்கே எண்ணூ

செங்கை கிழக்கு மாவட்டத்தில் உள்ள 41 காவல் நிலையங்கள் சென்னை மாநகர காவல்துறையுடன் இணைக்கப்படும்.

இணைக்கப்பட்ட சென்னை மாநகர காவல்துறையில் புதிதாக மாதவரம், அம்பத்தூர், புனித தோமையர் மலை (செயிண்ட் தாமஸ் மவுண்ட்)ஆகிய இடங்களில் துணை போலீஸ் கமிஷ்னர் அலுவலகங்கள் அமைக்கப்படும்.

அம்பத்தூர், ஆவடியில் புதிதாக போக்குவரத்து துணை போலீஸ் கமிஷ்னர் அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும். தாம்பரத்தில் உதவி போலீஸ்கமிஷனர் அலுவலகம் உருவாக்கப்படும்.

ஒருங்கிணைந்த சென்னை மாநகர காவல்துறையில் புதிதாக 3 சட்டம் ஒழுங்கு துணை கமிஷ்னர்களும், ஒரு போக்குவரத்து துணைகமிஷ்னரும் நியமிக்கப்படுவர். இதுதவிர ஐ.ஜி.அந்தஸ்தில் ஒரு கூடுதல் கமிஷ்னரும் நியமிக்கப்படுவார்.

சென்னை காவல்துறையில் கூடுதலாகச் சேரும் காவல் நிலையங்களில் புதிதாக வாகனங்கள் வாங்க, அலுவலகங்கள் கட்ட ரூ. 25.89 லட்சம்நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஒருங்கிணைந்த சென்னை காவல்துறையில் நான்கு மண்டலங்கள், 16 காவல் மாவட்டங்கள், 155 காவல் நிலையங்கள் இடம் பெறும். இதில்35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களாகும்.

வடக்கு மண்டலத்தில் பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, மாதவரம் ஆகிய நான்கு துணை கமிஷ்னர் அலுவலகங்களும்,மத்திய சென்னையில் திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர் ஆகிய துணை கமிஷ்னர் அலுவலகங்களும்,

தெற்கு மண்டலத்தில் மயிலாப்பூர், தியாகராய நகர், அடையார், புனித தோமையர் மலை ஆகிய துணை போலீஸ் கமிஷ்னர்அலுவலகங்களும் அமையும்.

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செங்கை கிழக்கு காவல் மாவட்டம் சென்னையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின்மிகப் பெரிய காவல் ஆணையமாக சென்னை மாநகர காவல்துறை உருவெடுத்துள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் பெருநகரங்களில் இருப்பதைப் போன்ற தீவிர போலீஸ் கண்காணிப்பும்,சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

சென்னை மாநகரின் எல்லையை விரிவுபடுத்தும் திட்டம் கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஆட்சி மாற்றம்ஏற்பட்டுவிட்டது. முதல்வர் ஜெயலலிதா அந்தத் திட்டம் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந் நிலையில் தற்போதுகாவல்துறையின் எல்லையை விரிவுபடுத்தி உத்தரவிட்டுள்ளார்.

சமீப காலமாக செங்கை கிழக்கு மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் இருந்த புறநகர் சென்னை பகுதிகளில் தொடர்ந்து கொலை, கொள்ளைச்சம்பவங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் அப் பகுதி சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்துடன்இணைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+