டெல்லியில் பிரதமருடன் வைகோ சந்திப்பு
சென்னை:
ஏழை நோயாளிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவி குறித்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விதியை தளர்த்துமாறு பிரதமர்மன்மோகன் சிங்கிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அமைச்சரவை மாற்றப்படவுள்ளதாகக் கூறப்படும் சூழலில் வைகோ நேற்று டெல்லி சென்றார். இது குறித்து மதிமுக தரப்பில்வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,
டெல்லியில் பிரதமரை வைகோ சந்தித்தார். அப்போது, சிகிச்சைக்கான செலவுகளை சந்திக்க முடியாமல் அவதிப்படும் ஏழைநோயாளிகளுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியுதவியில் கொண்டு வரப்பட்டுள்ள விதிகளைத் தளர்த்துமாறு அவர் பிரதமரிடம் கோரிக்கைவைத்தார்.
ஒரு எம்.பி. ஒரு மாதத்திற்கு ஒரு நோயாளிக்கு மட்டும் நிதியுதவி செய்ய பரிந்துரைக்கலாம் என்று புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விதியை ரத்து செய்யுமாறு வைகோ கோரினார்.
அதேபோல, இதய நோய் உள்ள குழந்தைகளின் சிகிச்சைக்கு ஆகும் முழுச் செலவையும் மத்திய அரசே ஏற்க வேண்டும், பிற நோய்களுக்குரூ. 50,000 வரை நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் பிரதமரை வைகோ கேட்டுக் கொண்டார் என்று செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
இது தவிர அரசியல் நிலவரம் குறித்தும், அமைச்சரவையில் மதிமுக சேருவது குறித்தும் வைகோவும் பிரதமரும் பேசியதாகத் தெரிகிறது.
அமைச்சரவையில் சேர மதிமுகவை காங்கிரஸ் தொடர்ந்து கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ!












Click it and Unblock the Notifications