பாலகுருசாமிக்கு புதிய பதவி
சென்னை:
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் தென் மண்டல கமிட்டி தலைவராக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்இ.பாலகுருசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் ஜெயராமன் கூறுகையில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின்அனைத்து உயர் பதவிகளுக்கும், தொழில்நுட்பக் கழகங்களில் பணியில் இருப்போர்தான் நியமிக்கப்பட வேண்டும் என்றுசமீபத்தில் தேசிய அளவில் கொள்கை வகுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தென் மண்டலக் கமிட்டி தலைவராக பாலகுருசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இது பல்கலைக்கழகத்திற்குக்கிடைத்த பெருமையாகும். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பாலகுருசாமி தொடர்வார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பில் இருக்கும் வரை கமிட்டி தலைவர் பதவியிலும் பாலகுருசாமி நீடிப்பார். இருப்பினும்அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை கமிட்டி தலைவராக அவர் நீடிக்க முடியும்.
தென்னிந்தியாவில் தொழில்நுட்பக் கல்வியின் தரம், புதிய அணுகுறைகள், பாடத் திட்டம் உள்ளிட்டவை குறித்து அகில இந்தியதொழில்நுட்பக் கவுன்சிலுக்கு தென்மண்டல கமிட்டி ஆலோசனைகள் வழங்கும் என்றார்.
இக் கமிட்டியில் நான்கு உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் விவரம்:
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) இயக்குனர், சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சிக் கவுன்சிலின்இயக்குனர், பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி முதல்வர், ஹைதராபாத் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகதுணைவேந்தர் ஆகியோர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications