ஆக்கிரமிப்பு: மதுரையில் பொது மக்கள்- போலீஸ் மோதல்- தடியடியில் பலர் காயம்
மதுரை:
மதுரை செல்லூர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது போலீஸார் மீது பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஆண்கள், பெண்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்புகளுக்கு பெயர் போனது மதுரை. வைகை ஆற்றங்கரை, கண்மாய்கள், சாலை ஓரங்களை ஆக்கிரமித்து முன்பு குடிசைமட்டும் போட்டு வந்தவர்கள் இப்போது ஏசி வசதியுடன் கூடிய கல்யாண மண்டபங்கள் வரை கட்ட ஆரம்பித்துவிட்டனர்.
தங்களது ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்துவிடாமல் தடுக்க இடையிடையே கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுதலங்களையும் கட்டி வைத்துக் கொள்வார்கள்.
கண்மாயில் இருந்து செல்லும் ஓடைகளையும் இவர்கள் வீடு கட்டி அடைத்துவிட்டதால், மழை பெய்தால் கண்மாய் நீர் வெளியேறவழியில்லாமல் உடைப்பெடுத்து வீடுகளுக்குள் புகுவது வழக்கம். இதில் ஆக்கிரமிப்பு செய்தவர்களின் வீடுகளை விட முறையாகஇடம் வாங்கி, வீடு கட்டியவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை உயர்நீதிமன்றக் கிளைஉத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறது.
பல்லாண்டுகளாக சாலைகளை, தெருக்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த பெரிய பெரிய கட்டடங்கள், வழிபாட்டுத் தலங்கள்என பல்வேறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால் மதுரை நகரில் சாலைகள் அகலமாகி வருகின்றன.
மதுரை மாநகராட்சிக்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, மேலும் 12 மாவட்டங்களிலும்ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றக் கிளை 2 நாட்களுக்கு முன் உத்தரவிட்டது.
இந் நிலையில் செல்லூர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது பொது மக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல்மூண்டது. செல்லூர், கீழத்தோப்பு பகுதியில் சாலையோரம் இருந்த மாரியம்மன் கோவிலை மாநகராட்சி ஊழியர்கள் இடிக்கமுயன்றனர்.
இதை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்தனர். பெண்கள், கோவிலுக்குள் சென்று பூட்டிக் கொண்டனர். சில பெண்கள்கோவிலுக்கு முன்பாக பொங்கல் வைக்கத் தொடங்கினர்.
இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார் பெரும் போலீஸ் படையுடன் அங்கு வந்தார். கூட்டத்தினரைகலைந்து போகுமாறு அவர் கூறினார். ஆனால் யாரும் நகரவில்லை. மாறாக, பொங்கல் வைத்துக் கொண்டே சில பெண்கள்போலீஸார் மீது கற்களை வீசித் தொடங்கினர்.
இதையடுத்து விஜயக்குமார் தடியடி நடத்த உத்தரவிட்டார். போலீசார் லத்தியை தாறுமாறாக சுழற்றியடிக்க ஆரம்பித்தனர்.
இதையடுத்து பொங்கப் பானைகளை விட்டுவிட்டு பெண்களும் ஆண்களும் சிதறி ஓடினர். அந்த இடமே கலவர பூமி போலகாணப்பட்டது. அதன் பின்னர் மாரியம்மன் கோவிலை மாநகராட்சி ஊழியர்கள் புல்டோசர் வைத்து இடித்துத்தரைமட்டமாக்கினர்.
அதற்கு முன்னதாக கோவிலில் இருந்து சிலைகளை ஊழியர்கள் பத்திரமாக அகற்றி பாதுகாப்பான இடத்தில் வைத்தனர்.
கல்வீச்சு மற்றும் போலீஸ் தடியடியில் பொதுமக்கள் பலரும், கல்வீச்சில் 5 போலீசாரும் காயமடைந்தனர்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications