காஷ்மீர்: கடும் பனி பொழிவு-26 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவில் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்ற இந்திய விமானப்படை களத்தில்குதித்துள்ளது.

காஷ்மீரில் வழக்கமாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனிப் பொழிவு காணப்படும். ஆனால் இம்முறைவழக்கத்தை விட அதிகமாக பனிப்பொழிவு இருக்கிறது. இதுவரை கடும் பனியில் சிக்கி 26 பேர் பலியாகிஉள்ளனர்.

மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். பலஇடங்களில் சாலைகள் பனியால் மூடப்பட்டுவிட்டதால் போக்குவரத்து தடைபட்டுவிட்டது. இதனால் காஷ்மீரில்மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் பனிப்பொழிவில் சிக்கியுள்ளவர்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் உதவியுடன் உணவுபொட்டலங்கள் போடப்பட்டு வருகின்றன. ஹெலிகாப்டர்கள் உதவியுடன் பனியில் சிக்கியவர்கள்காப்பாற்றப்பட்டு வருகின்றனர்.

இந்தப் பணியில் ராணுவ போக்குவரத்து விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பனிப் பொழிவில் சிக்கிய15,000க்கும் மேற்பட்டோரை காப்பாற்றியுள்ளதாக விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே இங்குள்ள 3 கி.மீ. நீளமுள்ள ஒரு குகையில் இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர்சுமார் 300 பேர் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு விமானம் மூலம் உணவுப் பொட்டலங்கள்வழங்கப்பட்டு வருகின்றன.

அவர்களை காப்பாற்றி பத்திரமாக மீட்டு வர நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக விமானப் படைதெரிவித்துள்ளது.

கடுமையான பனிப்பொழிவுக்கு இடையிலும் விமானப்படை வீரர்கள் முழுவீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+