இலங்கையில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி
கொழும்பு:
கொழும்புக்கு அருகே நீதிமன்றத்தில் இன்று குண்டு வெடித்ததில் 3 பேர் பலியாயினர். 30 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் ஆகியோர் இலங்கையில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டுமாலத்தீவுகளுக்குக் கிளம்பிய நிலையில் எம்பிலித்தியா என்ற இடத்தில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியொருவரின் வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது அந்த நபர் கையெறி குண்டைநீதிமன்றத்துக்குள் வீசியதாகத் தெரிகிறது.
இந்த குண்டு வெடித்துச் சிதறியதில் நீதிமன்றத்தில் இருந்த சிறை அதிகாரி, ஒரு பெண் மற்றும் இன்னொரு நபர் பலியாயினர். மேலும் 30பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் எம்பிலிதியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பையடுத்து ஏற்பட்ட குழப்பத்தால் நீதிமன்றத்தில் இருந்து 12க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தப்பியோடிவிட்டனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பல பகுதிகளை புஷ், கிளின்டன் ஆகியோர் கடந்த இரு தினங்களாகப் பார்வையிட்டனர்.இதனால் அவர்கள் பயணித்த பகுதிகள் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டது.
அவர்கள் மாலத்தீவுக்குப் புறப்பட்டுச் சென்ற நிலையில், நீதிமன்றத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications