ரவிக்கு மிரட்டல்: சங்கர மட பெண் வழக்கறிஞர்கள் மீது எப்.ஐ.ஆர்.
காஞ்சிபுரம்:
ரவி சுப்பிரமணியத்தை சிறையில் வைத்து மிரட்டியதாக கூறப்படும் பிரச்சினையில் சங்கர மடத்தின் பெண் வழக்கறிஞர்கள் இரண்டு பேர்மீதும் காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் அப்ரூவராக மாறிவிட்ட முக்கிய சாட்சியான ரவி சுப்பிரமணியம், கடந்த மாதம் 24ம் தேதி காஞ்சிபுரம்நீதிமன்ற நீதிபதி உத்தமராஜனிடம் ஒரு மனு கொடுத்தார்.
அதில், சங்கர மடத்தின் பெண் வழக்கறிஞர்களான ரேவதி, நசீரா பானு ஆகியோர் தன்னை சிறையில் சந்தித்து கொலை மிரட்டல்விடுத்ததாகவும், ஜெயேந்திரருக்கு ஆதரவாகப் பேசாவிட்டால் சிறையிலிருந்து வெளியே வர முடியாது என மிரட்டியதாகவும்தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து நசீரா பானு, செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். இந் நிலையில் ரவி சுப்பிரமணியத்தின்மனைவி சித்ரா சிவகாஞ்சி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில் ஜெயேந்திரர், சங்கர மட வழக்கறிஞர்கள் தியாகராஜன், சண்முகம் ஆகியோரின் தூண்டுதலின் பேரில்தான் பெண் வழக்கறிஞர்கள்ரேவதி, நசீரா பானு ஆகியோர் எனது கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனுவின் அடிப்படையில் ரேவதி மற்றும் நசீரா ஆகியார் மீது போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல்உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நசீராவுக்கு முன் ஜாமீன் உள்ளதால், ரேவதி எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது. இதையடுத்து ரேவதியும் முன்ஜாமீன் கோரி செங்கல்பட்டு செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ரவி சுப்பிரமணியத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகாரே, ஜெயேந்திரரை மீண்டும்உள்ளே தள்ளுவதற்கான முயற்சி தான் என மடத்தின் பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications