தமிழகத்தில் கடையடைப்பு போராட்டம் பிசுபிசுப்பு
சென்னை:
வாட் (வேல்யூ ஆடட் டாக்ஸ்) வரி விதிப்பை எதிர்த்து தமிழகத்தில் இன்று நடத்தப்பட்ட கடையடைப்பு போராட்டத்துக்கு வியாபாரிகளிடம்போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் போராட்டம் பிசுபிசுத்தது.
வாட் வரி விதிப்பை எதிர்த்து தமிழகத்தில் சில வணிகர் சங்கங்கள் இன்று ஒரு நாள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தன. இதேபோல நாடுமுழுவதிலும் கடையடைப்பு நடந்தது. இந்த போராட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய வர்த்தக சங்கங்கள் ஆதரிக்கவில்லை.
இந் நிலையில் இப் போராட்டத்துக்கு தமிழக பாஜக ஆதரவு தெரிவித்தது. அக்கட்சியின் தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம்பேசுகையில், தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது வாட் வரியை கடுமையாக எதிர்த்தது காங்கிரஸ். மக்கள்நலனை அதற்குக் காரணமாக காட்டியது.
ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் நலனை மறந்து விட்டு வாட் வரியை சுமத்தத் துடிக்கிறது. காங்கிரஸின் இந்த இரட்டைவேடத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கடையடைப்புக்கு பாஜக முழு ஆதரவு தரும் என்றார்.
இதற்கிடையே, தமிழக கடையடைப்புக்கு பல வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதால் கடையடைப்பு முழு அளவில்நடக்கவில்லை.
தலைநகர் டெல்லியிலும் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய அகில இந்திய வணிகர்சங்க செயலாளர் பிரவீன் கன்டேல்வால் கூறுகையில், இந்தியா முழுவதும் வாட் வரி விதிப்பை கண்டித்து வணிகர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
மார்ச் 17-ந்தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். மேலும் இந்தியா முழுவதும் வாட் எதிர்ப்புரத யாத்திரை நடத்தவும் தீர்மானித்துள்ளோம் என்றார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications