எம்.பிக்கள் கூட்டத்தைக் கூட்டுகிறது தமிழக காங்.
சென்னை:
அதிமுக, திமுகவைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சியும் தனது எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலை முதல்வர் ஜெயலலிதா முன் கூட்டியே நடத்தலாம் என்று கூறப்படுவதால் திமுக, பாமக ஆகியவை தங்களது பொதுக்குழுக்களை கூட்டின. அதே போல அதிமுகவின் பொதுக் குழு, செயற்குழுவும் கூடியது.
இந் நிலையில் சட்டசபைத் தேர்தல் பீதி காங்கிரஸையும் ஆட்டத் தொடங்கிவிட்டது.
அக் கட்சியும் தனது எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் கூட்டத்தை நடத்தவுள்ளது.
இதுதொடர்பாக கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசியல் சூழ்நிலை, சுனாமியால் ஏற்பட்டபாதிப்புகள், அதைத் தொடர்ந்து அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள், கட்சி வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து விவாதிக்ககட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
சத்தியமூர்த்தி பவனில் 24ம் தேதி மாலை 3 மணிக்கு கூட்டம் நடைபெறும். மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கூட்டத்தில்அழைப்பாளர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.
இக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்று கட்சிக்குள் எழுந்துள்ள கோரிக்கை குறித்தும் விரிவாகவிவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications