பெண்களுக்கு இட ஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் 33% இடங்களை அதிகரிக்க திட்டம்
டெல்லி:
பெண்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனையை சமாளிப்பதற்காக பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் 33சதவீத இடங்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பாராளுமன்றத்திலும் மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றுநீண்ட காலமாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இதுவரை அதிகாரபூர்வ சட்டம் எதுவும் நிறைவேற்றப்படவிடவில்லை. கடந்த 1996ல் தொடங்கி பலமுறை இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்போதிலும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
பெண்களின் ஆதரவை இழக்கவேண்டிவருமோ என்ற பயத்தில் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் வெளிப்படையாகஎதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனாலும் ஏதாவது ஒரு காரணம் கூறப்பட்டு இதுவரை இந்த மசோதாவுக்குமுட்டுக்கட்டை போடப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது காங்கிரஸ் அரசு இடஒதுக்கீடு மசோதாவை எப்படியும் நிறைவேற்றி விடுவது என்பதில்உறுதியாக உள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் தலைவி சோனியாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும்கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றினால் பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில்ஆண்களுக்கான போட்டியிடும் இடங்கள் குறையும். இதையடுத்து இடங்களின் எண்ணிக்கையை 33 அதிகரித்துஇந்தப் பிரச்சனையை சமாளிக்க சோனியா திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே டெல்லியில் நேற்று பேசிய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது பற்றிபரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications