தர்மபுரி பஸ் எரிப்பு: சேலம் கோர்ட்டில் விசாரணை
சேலம்:
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அரசு வழக்கறிஞரிடம் வருகிற திங்கள்கிழமைக்குள் ஒப்படைக்கவேண்டும் என சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரியில் கோவை வேளாண் கல்லூரி பேருந்தை வழிமறித்து அதிமுகவினர் தீ வைத்ததில் 3 மாணவிகள் பலியான சம்பவம் தொடர்பானவழக்கு சேலம் அமர்வு நீதிமன்றத்திற்கு கடந்த 2003ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தால் மாற்றப்பட்டது.
ஆனால் வழக்கு விசாரணைக்கு வரவேயில்லை. அரசுத் தரப்பு வேண்டுமென்றே தாமதம் செய்வதாக இறந்த மாணவிகளில் ஒருவரானகோகில வாணியின் தந்தை வீராசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது, வழக்கு தொடர்பான முக்கியஆவணம் தொலைந்து போய் விட்டதாக அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி கனகராஜ் கடும் கண்டனம் தெரிவித்தார். ஆவணத்தைக் கண்டுபிடிப்பதுடன், இத்தனை காலம் வழக்கு ஏன்விசாரணைக்கு வரவில்லை என்பதற்கு சம்பந்தப்பட்ட கால கட்டத்தில் உள்துறை செயலாளர்களாக இருந்தவர்கள் விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து அவசரம் அவசரமாக அரசு வழக்கறிஞராக சீனிவாசன் நியமிக்கப்பட்டார். காணாமல்போனதாக கூறப்பட்ட ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந் நிலையில் சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு முதல் முறையாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜராகி, வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தனக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி கிருஷ்ணராஜா, வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வருகிற திங்கள்கிழமைக்குள், கிருஷ்ணகிரிஅரசு வழக்கறிஞரிடமிருந்து பெற்று சீனிவாசனிடம் காவல்துறையினர் ஒப்படைக்க வேண்டும்.
வழக்கு தொடர்பாக சாட்சியம் அளிக்க வருவோருக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டியது காவல்துறையின் கடமை. சாட்சிகளைமிரட்டுவோர் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை தனிப்படை ஐ. ஜி. மிகுந்த கவனம் செலுத்தி தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். இன்றுவழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில், வழக்குக்கு தொடர்புடைய கூடுதல் எஸ்.பி. ராஜேந்திரன் நீதிமன்றத்திற்கு வராதது கடும்கண்டனத்துக்குரியது என்றார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications