ஜெ. கொடுத்த யானை ஓட்டப் பந்தயத்தில் வெற்றி!
குருவாயூர்:
குருவாயூரில் நடந்த யானைகளுக்கான ஓட்டப் பந்தயத்தில், முதல்வர் ஜெயலலிதா கிருஷ்ணன் கோவிலுக்குதானமாக வழங்கிய யானை "கிருஷ்ணா", முதல் பரிசைப் பெற்றது.
குருவாயூரில் யானைகளுக்கான ஓட்டப் பந்தயம் மிகவும் பிரசித்தமானது. இந்த ஆண்டுக்கான யானைப் பந்தயம்திங்கள்கிழமை நிடந்தது. இதில் ஏராளமான யானைகள் கலந்து கொண்டன.
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு முதல்வர் ஜெயலலிதா கடந்த 2001ம் ஆண்டு தானமாக கொடுத்த கிருஷ்ணாஎன்ற யானையும், முதல் முறையாக இந்தப் பந்தயத்தில் கலந்து கொண்டது.
பந்தயத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணா முதலிடத்தைப் பெற்று அனைவரது கைத்தட்டல்களையும்பெற்றது. கிருஷ்ணா வெற்றி பெற்ற செய்தி ஜெயலலிதாவுக்கு கோவில் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சந்தோஷமடைந்த ஜெயலலிதா, யானைக்கும், அதை ஓட்டிய பாகர்களுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், யானைக்கு தனது சார்பில் வெல்லக்கட்டிகளையும் கரும்புகளையும் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், கிருஷ்ணா வெற்றி பெற்றதைப் பாராட்டி சிறப்புப் பரிசுகளை விரைவில் தனது தூதர் மூலம் அனுப்பிவைப்பதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
2001ம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதும், கிருஷ்ணர் கோவிலுக்கு தங்க கிரீடம் (இப்போதுசர்ச்சையைக் கிளப்பி வருகிறது), யானை உள்ளிட்டவற்றை தானமாக வழங்கினார் ஜெயலலிதா.
குருவாயூர் கோவில் வழக்கப்படி, பந்தயத்தில் வெற்றி பெறும் யானை கோவில் திருவிழா நாட்களில் பாரம்பரியம்மிக்க தங்க செங்கோலை ஏந்தி வரும் பெருமையைப் பெறும்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications