இரானில் பயங்கர நிலநடுக்கம்: 231 பேர் பலி
தெஹ்ரான்:
இரானில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 231 பேர் வரை பலியாகியுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டேவருகிறது.
காலை ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 என்ற அளவுக்குப் பதிவாகியுள்ளது. இதில் பல கிராமங்கள் அடியோடுதரைமட்டமாகியுள்ளன. இதுவரை 231 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பலியானோர் எண்ணிக்கை மிக அதிகமாகஇருக்கலாம் என்று தெரிகிறது.
1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கெர்மன் என்ற இடத்திற்கு 56 கிமீ தொலைவில் நில நடுக்கத்தில் மையம் இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சித் துறைதெரிவித்துள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு டிசம்பரில் இரானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 26,000 பேர் பலியானது நினைவுகூறத்தக்கது. ரிக்டர்அளவுகோலில் 6.6 என்ற அளவுக்கு அந்த நிலநடுக்கம் பதிவானது.
இரானின் கிராமப் பகுதிகளில் பெரும்பாலும் சுடு மண்ணால் கட்டப்பட்ட வீடுகள் தான் என்பதால் அவை சிறிய நில அதிர்வுகளையும்தாங்குவதில்லை. இதனால் நில நடுக்கங்களால் இந்த நாட்டில் உயிர்ச் சேதங்களின் அளவு அதிகமாகவே உள்ளது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications