For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஞ்சி. வழக்கறிஞர்கள் மீண்டும் ஸ்டிரைக்

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

ரவி சுப்பிரமணியத்தை மிரட்டியதாக சங்கர மட வழக்கறிஞர்கள் 4 பேர் மீது காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் மீண்டும் இன்று முதல் 3 நாட்களுக்கு வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

காஞ்சிபுரம் சிறைக்கு சென்று ரவி சுப்பிரமணியத்தை மிரட்டியதாக சங்கர மட வழக்கறிஞர்கள் தியாகராஜன், சண்முகம், ரேவதி, நசீரா பானு ஆகியோர் மீது காஞ்சிபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதைக் கண்டித்து கடந்த வாரம் 3 நாட்கள் காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் அதைக் கண்டுகொள்ளாமல், 4 வழக்கறிஞர்கள் மீதும் காஞ்சிபுரம் போலீஸார் தொடர்ந்து எப்ஐஆர் பதிவு செய்தனர்.

இதையடுத்து இன்று முதல் மீண்டும் 3 நாட்களுக்கு நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தை காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர். இருப்பினும் ஒரு பிரிவு வழக்கறிஞர்கள் இதில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

நாளை குற்றப் பத்திரிக்கை நகல்?:

சங்கரராமன் கொலை வழக்கில் காவல் நீட்டிப்புக்காக விஜயேந்திரர் உள்ளிட்ட 23 பேர் நாளை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதையடுத்து நாளையே குற்றப் பத்திரிக்கை நகலை அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X