பீகார்: தேர்தல் வன்முறையில் 7 பேர் பலி
பாட்னா:
பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தலிலும் வன்முறை வெடித்தது. இதில் 7 பேர் பலியாயினர்.
பீகாரில் 93 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 28 தொகுதிகளுக்கும் இன்று இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற தேர்தல் கமிஷன் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருந்தது. கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் இன்றைய தேர்தலில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. பிகாரில் சிவான் என்ற இடத்தில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு பயங்கர குண்டு வெடித்தது. இதில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மேலும் வைசாலி, பாட்னா, முஸாபர்பூர் பகுதிகளில் தலா ஒருவர் இறந்தனர். ஜார்க்கண்டில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு சிறப்புப் படை காவலர் கண்ணி வெடியில் சிக்கி இறந்தார்.
இன்றைய தேர்தலில் இரு மாநிலங்களிலும் 50 முதல் 55 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications