தர்மபுரி பஸ் எரிப்பு: 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நீதிபதி கண்டனம்
சென்னை:
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் உள்துறைச் செயலாளர்கள் 3 பேர் தாக்கல் செய்த அறிக்கைகள் மிகவும் பொறுப்பற்ற முறையில் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கனகராஜ் கடும் கண்டனம் தெரிவித்தார்.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் உள்துறைச் செயலாளர்கள் 3 பேர் தாக்கல் செய்த அறிக்கைகள் மிகவும் பொறுப்பற்ற முறையில் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கனகராஜ் கடும் கண்டனம் தெரிவித்தார்.
தர்மபுரியில் கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவிகளை அதிமுகவினர் பஸ்ஸோடு சேர்த்து எரித்த வழக்கை சேலம் நீதிமன்றத்திற்கு மாற்றி 2 ஆண்டுகள் ஆகியும் வழக்கு விசாரணை தொடங்கப்படவில்லை.
இதற்கு தமிழக அரசை மிகக் கடுமையாக கண்டித்தார் நீதிபதி. அப்போது இந்த வழக்கின் கேஸ் கட்டுகள் காணாமல் போய்விட்டதாக தமிழக அரசு புருடா விட்டது.
பஸ் எரிப்பு வழக்கை சிபிஐயிடம் தந்துவிடவா என்று நீதிபதி கேட்டதையடுத்து ஒரே நாள் இரவில் கேஸ் கட்டுகளை கண்டுபிடித்து ஸ்காட்லாண்ட் யார்ட் போலீசையை விஞ்சியது தமிழக காவல்துறை.
பஸ் எரிப்புக்குப் பின் தமிழக அரசின் உள்துறைச் செயலாளராக இருந்தவர்கள், இந்த வழக்கின் விசாரணையில் இவ்வளவு காலம் தாமதப்பட்டது ஏன் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து மாஜி உள்துறைச் செயலாளர்களான சையத் முனீர் ஹோதா, ஷீலா ராணி சுங்கத், மற்றும் தற்போதைய உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஏனோ தானோ அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
அதில், சேலம் நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிடும்போது, சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தது. அதை நீக்கக் கோரி அரசுத் தரப்பு முறையீடு செய்திருந்தது. அதன் காரணமாக சேலம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவது தாமதமானது.
உயர் நீதிமன்றம் கூறினால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கத் தயார் என்றும் 3 அதிகாரிகளும் தங்களது அறிக்கையில் கூறியிருந்தனர்.
இந்த அறிக்கைகள் குறித்து நீதிபதி கனகராஜ் நேற்று விசாரணை நடத்தினார்.
அப்போது பஸ் எரிப்பில் கொல்லப்பட்ட மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமியின் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் விடுதலை,
வழக்கு விசாரணையைத் தொடங்குவதற்கும், நீதிமன்றக் கருத்துக்களை நீக்கக் கோரி மனு செய்துள்ளதற்கும் சம்பந்தமே இல்லை. இதை ஒரு காரணமாக அதிகாரிகள் கூற முடியாது என்றார்.
நீதிபதி கனகராஜும் அதை ஏற்றுக் கொண்டார்.
அதிகாரிகளின் அறிக்கை மிகவும் பொறுப்பற்றதாக உள்ளதாக கூறிய நீதிபதி வழக்கை தாமதப்படுத்தியதற்கான காரணத்தைக் கேட்டால் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறுவதா என்று கண்டித்தார்.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசு மீது கோகில வாணியின் தந்தை வீராசாமி தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கனகராஜ் அறிவித்தார்.
இந்த வழக்கில் இன்று மிக முக்கியமான தீர்ப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications