கடனை திருப்பி கேட்ட பெண் எரித்து கொலை
சென்னை:
பூந்தமல்லி அருகே கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்ட பெண் தீவைத்து எரித்துக் கொல்லப்பட்டார்.
பூந்தமல்லி அருகே உள்ள குமணன் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கனிமொழி (36). இவரது கணவர் மூர்த்தி.இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
கனிமொழி, அப்பகுதியில் சீட்டுப் பிடித்து வந்தார். அதில் வந்த பணத்தை வட்டிக்கும் கொடுத்து வந்தார்.கனிமொழியிடம் மாங்காடு ரகுநாதபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாண்டியன் என்பவர் 25,000 ,பூந்தமல்லியைச் சேர்ந்த தாஸ் என்பவர் ரூ. 75,000 பணம் வட்டிக்கு வாங்கியிருந்தனர்.
வட்டிக்கு வாங்கிய பணத்தை இருவரும் திருப்பிக் கொடுக்காமல் தாமதப்படுத்தியுள்ளனர். இதையடுத்து பணத்தைதிருப்பித் தருமாறு கனிமொழி கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து கனிமொழியை மாங்காட்டில் உள்ள ஒருவீட்டுக்கு மாலை வருமாறு இருவரும் கூறியுள்ளனர்.
இதையடுத்து கனிமொழி மாலை 4 மணியளவில் அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றுள்ளார். அங்குபாண்டியனும், தாஸும் சேர்ந்து கனிமொழியை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளனர். அதிர்ந்து போனகனிமொழி மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து கனிமொழி மீது ஊற்றிய இருவரும் அவர் மீதுதீவைத்து விட்டு கதவை வெளியில் பூட்டி விட்டு தப்பினர். தீயில் கருகிய கனிமொழியை அப்பகுதியைச்சேர்ந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கனிமொழி இறந்தார். கனிமொழியை தீவைத்து எரித்த பாண்டியன், தாஸ் இருவரும்கைது செய்யப்பட்டனர்.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications