பட்ஜெட் தாக்கல்: வருமான வரி விதிப்பில் மாறுதல்
டெல்லி:
2005-06ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில் வருமான வரியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சம் வரை உள்ளவர்களுக்கு முழு வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரைவருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீத வரியும், ரூ. 1.5 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 20 சதவீத வரியும்விதிக்கப்பட்டுள்ளது.
ரூ. 2.5 லட்சத்துக்கு அதிகமான வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
மூத்த குடிமக்களுக்கு ரூ.1.5 லட்சம் வருமானம் வரை வரி விலக்கும், பெண்களுக்கு ரூ. 1.25 லட்சம் வருமானம் வரை வரி விலக்கும்அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமான வருவாய் உள்ளவர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரிஅறிவிக்கப்பட்டுள்ளது. இது முன்பு ரூ. 8.5 லட்சமாக இருந்தது. இந்த வரம்பு ரூ. 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கியிலிருந்து ஒரு நாளைக்கு ரூ. 10,000க்கும் அதிகமாக பணம் எடுத்தால் ரூ. 10 கட்டணம் (0.1 % வரி) செலுத்த வேண்டும் என்ற புதியவிதியும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டில் சாப்ட்வேர் துறையில் 70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சுனாமி நிவாரணம் மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்கு ரூ. 10,216 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டில் நாட்டின் ஜவுளி ஏற்றுமதி 150 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்றும், இந்தத் துறையில் மேலும் 1.2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், உணவு பதப்படுத்தும் துறையில் 2.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும்மதிப்பிடப்பட்டுள்ளது.
சிகரெட், குட்கா மீதான சுங்க வரி 10% அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரி லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சமையல் எண்ணெய், டீத் தூள் மீதான 1 சதவீத வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. ரெப்ரிஜிரேட்டர்கள் மீதான மீதான வரி 20சதவீதத்தில் இருந்து 10% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
பிராண்டட் நகைகள் மீது 2 சதவீத சுங்க வரி விதித்துள்ள சிதம்பரம், கவரிங் நகைகள் மீதான 4 சதவீத வரியை ரத்து செய்துள்ளார்.ஏழைகளே அதிக கவரிங் நகைகளை உபயோகிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிதம்பரம் அறிவித்தார்.
அதே போல வனஸ்பதி மீதான சுங்க வரியும் நீக்கப்பட்டுள்ளது. அடுப்பெரிக்க பயன்படும் நிலக்கரி, எலெக்ட்ரானிக் பொருட்கள்,பாலியஸ்டர் மீதான கஸ்டம்ஸ் வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.
விவசாயமல்லாத பொருட்கள் மீதான கஸ்டம்ஸ் வரி மொத்தமாக 20%ல் இருந்து 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது. உணவு, உரம்,பெட்ரோலியப் பொருட்கள் மீதான மானியங்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் அறிவியல் கல்வி மையத்தை (ஐஐஎஸ்) சர்வதேச பல்கலைக்கழகமாக மாற்ற ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்துறைக்கு ரூ. 83,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்களை அமைக்க நிதி திரட்ட புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தேசியமய வங்கிகளைசீர்திருத்தி தனியார் வங்கிகளுடன் போட்டியிட வைக்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மேலும் 1 கோடி ஹெக்டேர் நிலங்களுக்கு பாசன வசதி செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது. லண்டனுக்கும் டோக்கியோவுக்கும்நடுவே அமைந்திருக்கும் மும்பை நகரை மண்டல நிதி மையமாக்க ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஊரக மின் வசதிக்கு ரூ. 1100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 66,820 கிராமங்களில் தொலைபேசிவசதி செய்து தர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு மாநிலங்களுக்கு சாலை பணிகளுக்கு ரூ. 450 கோடி சிறப்பு நிதியும், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை விரிவாக்கி மேலும்11 கோடி குழந்தைகளுக்கு உணவு வழங்க ரூ. 3,010 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உருது ஆசிரியர்கள் நியமனத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் சுகாதார கழிவறைகள் கட்ட ரூ. 630 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 60 லட்சம் கிராமப் புற ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரநிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு ரூ. 10,280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் 2.5 கோடி பேருக்கு அன்ன யோஜனா திட்டம், விவசாயத்துக்கு மானியம் வழங்க ரூ. 16,204 கோடிநிதி ஒதுக்கீடு, தேசிய கல்வித் திட்டத்துக்கு ரூ. 4,754 கோடி, உணவுக்கு வேலை திட்டம் மேலும் 250 மாவட்டங்களுக்கு விரிவாக்கம், 2.16லட்சம் கிராமங்களுக்கு சுகாதார குடிநீர் வழங்க ரூ. 4,700 கோடி ஒதுக்கீடு என பல்வேறு அறிவிப்புகளை சிதம்பரம் பட்ஜெட்டில்அறிவித்தார்.
சிதம்பரம் மிகச் சிறந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் பட்ஜெட்டில் உள்ள தகவல்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு லீக் செய்ததாகக் கூறி பிரதமர் மன்மோகன் சிங்மீது பாஜக உரிமைப் பிரச்சனையை கொண்டு வர முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications