கூட்டணி ஆட்சி நேரம் வந்து விட்டது: கிருஷ்ணசாமி
திருச்சி:
தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான நேரம் கனிந்து விட்டது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர்டாக்டர். கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறிய கருத்துக்களில் எந்தத் தவறும் இல்லை. கூட்டணி ஆட்சிக்கு தமிழகம் தயாராக வேண்டும்.அதற்கான சரியான நேரம் வந்து விட்டது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க திமுக தலைவர் கருணாநிதி அவராகவே முன்வர வேண்டும்.
தேர்தல் முறைகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். பெற்ற ஓட்டுக்களின் அடிப்படையில்வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படக் கூடாது. கட்சிக்குக் கிடைத்த வாக்குகளின் சதவீத அடிப்படையில் எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்கள் தேர்வுசெய்யப்பட வேண்டும்.
இந்த யோசனை தொடர்பாக தீவிர விழிப்புணர்வுப் பிரசாரங்கள் நடத்தப்பட வேண்டும். அரசியல் கட்சிகள் இதற்குமுன்வர வேண்டும். இந்த முறைக்கு முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கும் ஆதரவு தெவித்துள்ளார்.
கோவையில் ஏப்ரல் 14ம் தேதி மாநில அளவிலான மாநாட்டை நடத்தவுள்ளோம். இதில் முன்னாள் குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன், முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர் என்றார் கிருஷ்ணசாமி.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications