சுனாமி நிவாரணம்: அரசியல்வாதிகளுக்கு டிஜிபி கண்டனம்
சென்னை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு பெரும் இடையூறு விளைவிக்கும்விதமாக அரசியல்வாதிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் நடந்து கொண்டதாக தமிழக டிஜிபி அலெக்சாண்டர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகம் சார்பில் நடந்த பேரிடர் நிவாரணம்: சுனாமி என்ற கருத்தரங்கில் பேசிய அலெக்சாண்டர்,
அரசுடன் தங்களுக்கு உள்ள தொடர்பை அடிப்படையாக வைத்து சுனாமி பிரச்சினையில் அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களைத்தெரிவிக்கின்றனர்.
அரசுடன் நல்லுறவு வைத்திருந்தால் அரசைப் பாராட்டியும், இல்லாவிட்டால் நல்ல பணிகளைக் கூட கடுமையாக விமர்சித்தும் அரசியல்தலைவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இதனால் நிவாரணப் பணியில் ஈடுபடுவோன் மனம் புண்படுகிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை. அரசைக் குற்றம் சாட்ட வேண்டும்என்பது மட்டும்தான் அரசியல்வாதிகளின் ஒரே நோக்கமாக உள்ளது.
இவர்களாவது பரவாயில்லை, தொண்டு நிறுவனங்கள் இன்னும் மோசம். சுனாமி போன்ற பேரிடர் சம்பவங்களில்தான் அவர்கள் தங்களதுபலத்தையும், செல்வாக்கையும் உலகுக்குக் காட்ட சரியான நேரம். எனவே போட்டி போட்டுக் கொண்டு அரைகுறையாக எதையாவதுசெய்து விளம்பரம் தேட முனைகிறார்கள்.
அவர்களது நோக்கத்தில், உதவியில் முழுமையான சேவை மனப்பான்மை இல்லை என்பதே உண்மை.
அவர்களுக்குள், யார் பெரியவர் என்ற போட்டியும், நிவாரணப் பணிகளை முழுமையாக செய்ய விடாமல் தடுத்து விடுகிறது.
இப்படிப் பல சவால்களுக்கிடையே அரசு நிர்வாகமும், காவல்துறையும் தங்களால் இயன்ற பணிகள் அனைத்தையும் சிறப்புடன்செய்துள்ளதையும் நாம் இங்கே சொல்லியாக வேண்டும்.
அதிலும், நாகப்பட்டனம் ஆட்சித் தலைவர் ஜே.ராதாகிருஷ்ணன், கடலூர் ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடி ஆகியோர் மிகச் சிறப்பானமுறையில் செயல்பட்டனர் என்றார் அலெக்சாண்டர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications