பிளஸ் டூ தேர்வுகள் நாளை தொடக்கம்
சென்னை:
தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. 5.7 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வுஎழுதுகின்றனர்.
தமிழ் முதல் தாளுடன் நாளை தொடங்கி, 23ம் தேதி பொருளாதாரத் தேர்வுடன் பிளஸ் டூ தேர்வுகள் முடிகின்றன.
இதற்காக 1,500 தேர்வு மையங்கள் அமைக்கப்பபட்டுள்ளன. தேர்வுகளில் முறைகேடுகளைத் தவிர்க்க 65 கல்விமாவட்டங்களிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேர்வு தொடங்குவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இங்கு ஏப்ரல் 4-ந்தேதிதொடங்கி 26-ந்தேதி முடிவடைகிறது.
மாணவர்களை குழப்பும் கல்வித்துறை:
இதற்கிடையே ராமநாதபுரத்தில் தேர்வுத்துறையின் குளறுபடியால் பிளஸ் டூ தனித் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெரும் குழப்பத்தில்தள்ளப்பட்டுள்ளனர்.
தனித் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு நுழைவுச் சீட்டுகள் வழங்கியதில் பல குளறுபடிகள் நடந்துள்ளன.
ஆங்கில வழியில் தேர்வெழுத விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுச் சீட்டில் தமிழ் வழி என்று வந்துள்ளது. பலருக்கு பாடங்கள் மாறியும்வந்துள்ளது.
வேதியியல் பாடம் எழுத விண்ணப்பித்தவருக்கு இயற்பியல் எனவும், மேலும் சிலருக்கு பாடங்கள் விடுபட்டும் நுழைவுச் சீட்டுகள்வந்துள்ளன.
நாளை தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில் தேர்வு மையங்களின் தலைமை ஆசிரியர்களும், கல்வித்துறை அதிகாரிகளும் உரிய பதில்தராததால் மாணவர்கள் விளக்கம் பெற அங்குமிங்கும் ஓடாடிக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் இந்த மாணவர்களால் கடந்த ஒரு வாரமாக படிக்கக் கூட முடியவில்லை.
இந் நிலையில், நுழைவுச் சீட்டில் குளறுபடி நேர்ந்துள்ள மாணவர்கள், சம்பந்தப்பட்ட தேர்வு மைய அதிகாரியிடம் ஒரு கோரிக்கைகடிதத்தைக் கொடுத்து தேர்வு எழுதிக் கொள்ளலாம் என சில அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications