பணக்காரர்களுக்காக போடப்பட்ட பட்ஜெட்: ஜெ
சென்னை:
ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மக்களைப் பாதிக்கும் வகையிலான, இலக்கே இல்லாத பட்ஜெட்டை ப.சிதம்பரம்தாக்கல் செய்துள்ளார் என்று முதல்வர் ஜெயலலிதா கருத்து தெவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த பட்ஜெட் பணக்காரர்களுக்காகப்போடப்பட்டுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மக்களைப் பாதிக்கும் வகையிலான பல அறிவிப்புகளைவெளியிட்டுள்ளார்.
நாட்டை எப்படி வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வது என்பது பட்ஜெட்டில் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.பெரும் குழப்பமான பட்ஜெட் இது.
நிதிப் பொறுப்பு மற்றும் நிதி நிலை நிர்வாக சட்டத்தை தன்னால் சரிவர பின்பற்ற முடியவில்லை என்பதைப.சிதம்பரம் ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் அப்படி ஒத்துக் கொண்டால் மட்டும் போதாது. களையில்லாதபட்ஜெட்டை அவர் தாக்கல் செய்திருக்கக் கூடாது.
பழைய திட்டங்களுக்கு புதுப் பெயர் கொடுத்து மீண்டும் புது உருவம் கொடுத்துள்ளார்கள். தேசிய வேலைவாய்ப்புஉறுதிமொழித் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
ஆறுகளை இணைப்பது தொடர்பாக பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம் பெறாதது வருத்தம் தருகிறது.அதேபோல பாரத் நிர்மாண் திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் 1 கோடி ஹெக்டேர் விவசாய நிலங்களுக்குஉறுதிப்படுத்தப்பட்ட நீர்ப்பாசன வசதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தமிழகத்திற்குஎந்தவிதத்திலும் உதவாது.
பின் தங்கிய பகுதிகளுக்கு ரூ. 5,000 கோடி நிதியுதவி அளிக்கும் திட்டத்தால் மாநில அரசின் உரிமையில் மத்தியஅரசு தலையிடுகிறது. ஏற்கனவே விற்பனை வரியை தங்களது கட்டுப்பாட்டில் மத்திய அரசு எடுத்துக் கொண்டுவிட்டது. தற்போது மாநில அரசின் நிதியாதாரத்தில் கை வைப்பது போல மத்திய அரசு நடந்து கொள்ளுகிறது.
வங்கியில் பணத்தைப் போட்டு வைத்திருப்பவர்கள் அதை எடுத்தால் வரி என்று ப.சிதம்பரம் கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. கருப்புப் பணத்தைத் தடுக்கப் போகிறேன் பேர்வழி என்று கூறி நாட்டின் பொருளாதாரத்தின்குரல் வளையையே நசுக்கும் வேலையில் இறங்கியுள்ளார் ப.சிதம்பரம்.
இந்த புதிய வரி விதிப்பு காரணமாக வங்கிகளுக்கு வருவதையே மக்கள் தவிர்க்கும் நிலை ஏற்படப் போகிறதுஎன்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications