தமிழகத்தில் கூட்டணி ஆட்சி எடுபடாது: வைகோ

Subscribe to Oneindia Tamil

கோவை:

தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை எப்போதும் ஏற்க மாட்டர்கள் என்று மதிமுக பொதுச் செயலாளரான வைகோ கூறினார்.

கோவையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

மத்திய அரசின் பட்ஜெட் தொலை நோக்கோடு தயாரிக்கப்பட்டுள்ளது. கிராமப் புறங்களுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.தலித்துகள், முதியோர்கள், பெண்களுக்கு சலுகைகள் வரவேற்கத்தக்கவை.

ஆனால், விவசாய கடனை தள்ளுபடி செய்வதில் சரியான அணுகுமுறை இல்லை. விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் உள்ளவிதிமுறைகளை தளர்த்த வேண்டும்.

சேது சமுத்திர திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாததற்கு தமிழக அரசு தான் காரணம் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.சேது சமுத்திர திட்டம் தொடர்பாக துறைமுகப் பகுதிகளில் மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் கூட்டம் நடந்த போது மீனவர்கள் தங்களதுகுறைகளை கூறினார்கள்.

ஆனால் அந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய முதல்வர் ஜெயலலிதா முன் வரவில்லை.சேது சமுத்திர திட்டம் தன்னால் தான் வந்தது என்றுநான்கு முறை அறிக்கை விட்டார். ஆனால் அந்தத் திட்டம் நிறைவேற அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கூட்டணி ஆட்சி என்ற கருத்தை இதுவரை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டதில்லை. இனிமேலும் அது நடக்காது.

கூட்டணியில் இருந்து கொண்டே ஒரு கட்சி தலைமையை விமர்சிப்பது நல்லதல்ல. அவர்கள் விமர்சித்து பேசியதை புரிந்து கொண்டு தான்திமுக உயர்மட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் போட்டுள்ளார்கள்.

தமிழக அரசியலையும், தமிழ்நாட்டையும் பாழ் படுத்தும் ஜெயலலிதாவை அப்புறப்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் கூட்டணியின்ஒரே குறிக்கோள்.

இந்தக் கொள்கை வலுவாக உள்ளது. எனவே எங்களது கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.

தர்மபுரியில் 3 மாணவிகள் எரிக்கப்பட்ட வழக்கில் உண்மைகளையும் நீதியையும் குழி தோண்டிப் புதைக்க அரசும் போலீசாரும்முயல்கின்றனர். இந்த விவகாரத்தை வரும் சட்டமன்றத் தேர்தலில் பிரதானமாக வைப்போம். மக்கள் தகுந்த தீர்ப்பளிக்க வேண்டும்.

தேர்தலை நடத்தும் எண்ணத்தை ஜெயலலிதா தனது மனதுக்குள் ரகசியமாக வைத்திருந்தாலும் அது இந்த மாதம் வெளியில் தெரிந்துவிடும்.ஜெயலலிதா நினைத்த நேரத்தில் எல்லாம் தேர்தல் கமிஷன் தேர்தல் நடத்தாது என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+