புலிகள் மீதான தாக்குதல்: விசாரிக்க கமிஷன்
கொழும்பு:
எங்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால் அமைதி ஒப்பந்தத்தை மீறுவோம் என்று விடுதலைப் புலிகள் எச்சரிக்கைவிடுத்துள்ளதையடுத்து, இந்தத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்க 2 நதிபதிகள் கொண்ட கமிஷனை அதிபர் சந்திரிகாஅமைத்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் சமீபகாலமாக விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த திங்களன்று கிழக்குப்பகுதியில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த 3 பெண்கள் மீது தாக்குதல்நடத்தப்பட்டது. அடிக்கடி நடக்கும் இதுபோன்ற தாக்குதல்களுக்கு இலங்கை அரசும் அவர்களது பாதுகாப்பில்உள்ள கருணா கோஷ்டியுமே காரணம் என்று விடுதலைப்புலிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந் நிலையில், தங்கள் மீது இனியும் தாக்குதல் தொடர்ந்தால் அமைதி ஒப்பந்தத்தை மீறுவோம் என்று விடுதலைப்புலிகள், இலங்கை அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த 2 உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைக்க அதிபர் சந்திரிகா உத்தரவிட்டுள்ளார்.
ஒரு மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் இந்த விசாரணைக் கமிஷனை ஏற்க விடுதலைப்புலிகள் தயாராக இல்லை. சந்திரிகாவின் உண்மைமுகத்தை அறிந்தவர்கள் என்பதால், நார்வே தூதுக்குழுவினர் தான் எங்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரணைநடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று புலிகள் கோரியுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications