ஜெயலலிதா அமெரிக்கா பயணம்?
சென்னை :
முதல்வர் ஜெயலலிதா ஒரு மாத கால அமெரிக்கா பயணம் மேற்கொள்வார் என்று தெரிகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரில் துவங்கவுள்ள நிலையில் அடுத்த மாதம் முதல்வர் அமெரிக்கா செல்வார் என்று தெரிகிறது. மூட்டு வலி, முதுகு வலி பிரச்சனைகளுக்காக வெளிநாட்டில் சிகிச்சை எடுக்க அவர் செல்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரலில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தபின் முதல்வரின் பயணம் தொடங்குமாம்.
முன்பு, தன்னுடன் சசிகலா, அவரது உறவினர்கள் சிலர், அதிகாரிகள் என 32 பேரை அழைத்துக் கொண்டு லண்டனுக்குச் செல்ல மத்திய அரசிடம் சிறப்பு அனுமதியும் ஏராளமான அன்னியச் செலாவணியும் முதல்வர் கேட்டதாகவும் அதற்கு மத்திய அரசு மறுத்ததாகவும் முன்பு தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இப்போது 16 பேர் கொண்ட காம்ப்பேக்ட் குழுவுடன் ஜெயலலிதா செல்வார் என்று கூறப்படுகிறது. இங்கிலாந்துக்குப் பதில் அமெரிக்காவுக்கு ஜெயலலிதா செல்வார் என்று தெரிகிறது.
லண்டனில் ஹோட்டல் வாங்கிய வழக்கும் சொத்து குவித்த வழக்கும் பெங்களூர் நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 14ம் தேதி தொடங்குகிறது. அதே தேதியில் தான் சட்டமன்றத்தில் ஜெயலலிதா காவல்துறை மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும்.
இதனால் 14ம் தேதி பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்க நீதிமன்றத்தில் ஜெயலலிதா முன் அனுமதி பெற முயல்வார் என்று தெரிகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications