ஜார்க்கண்ட்: சிக்கலில் மாட்டிய ஆளுநர், காங்

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி:

பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்து தங்களை ஆட்சியமைக்க விடாமல் காங்கிரஸ்-ஜார்க்கண்ட்முக்தி மோச்சா கூட்டணியை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநரை கண்டித்து இன்று ஜார்கண்ட் மாநிலத்தில் பாரதியஜனதா கட்சி பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இதனால் அம் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கைபாதிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், தங்களது 41 எம்எல்ஏக்களையும் ஜனாதிபதி முன்இன்று நிறுத்தப் போவதாகவும் பா.ஜ.க. அறிவித்துள்ளது.

இதையடுத்து ஆளுநர் சையத் ராஸியை உடனடியாக டெல்லிக்கு வருமாறு கலாம் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் பெரும் சிக்கலாகிவிட்டதால், அதைச் சமாளிப்பது குறித்து அட்டர்னி ஜெனரலுடன் பிரதமர்மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து சிபு சோரனை ஆட்சியமைக்க அழைத்ததில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அதுஆளுநர் ராஸியே எடுத்த முடிவு என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான சிபு சோரனுக்கு நேற்று ஆளுநர் சையத் ராஸிபதவிப் பிரமாணம் செய்து வைத்ததோடு, பெரும்பான்மையை நிரூபிக்க 20 நாட்கள் அவகாசமும்கொடுத்துள்ளார்.

கவர்னரின் இந்த செயலைக் கண்டித்து ஜார்கண்ட் மாநிலத்தில் பந்த் போராட்டத்திற்கு இன்று பா.ஜ. வினர்அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனால் அங்கு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பஸ்கள் ஓடவில்லை.ஜார்கண்ட் மாநில ஆளுநரை நீக்கக் கோரி நாடு முழுவதும் பந்த் நடத்தப்போவதாகவும் பா.ஜ.க அறிவித்துள்ளது.

சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தான் ஆளுநர் செயல்பட்டுள்ளதாக பாஜககுற்றம் சாட்டியுள்ளது.

ஆளுநர் ராஸி ஒரு காண்டராக்ட் கொலைகாரர் (சுபாரி கில்லர்) என பாஜக தலைவர் அத்வானி கடுமையாகவிமர்சித்துள்ளார்.

இதற்கிடையே தனது 34 எம்.எல்.ஏ.க்களையும் தங்களுக்கு ஆதரவு தெரிவித்த 7 எம்எல்ஏக்களையும் ஜனாதிபதிமுன் ஆஜர்படுத்தப் போவதாக கூறியுள்ள பா.ஜ.க, நேற்று 33 எம்எல்ஏக்களை விமானம் மூலம் டெல்லிக்குஅழைத்து வந்துள்ளது.

மீதமுள்ள 8 எம்.எல்.ஏக்களும் நேபாளம் வழியாக டெல்லி வரவிருப்பதாக பா.ஜ.க வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

41 எம்எல்ஏக்களை இன்றே ஜனாதிபதி கலாம் முன் ஆஜர்படுத்தி, ஆட்சியமைக்க தங்களுக்கு பெரும்பான்மைஇருப்பதை நிரூபிக்கப் போவதாக பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே தன்னுடைய கணவரைக் காணவில்லை என்று சுயேச்சை எம்.எல்.ஏ.வின் மனைவி ஒருவர் ராஞ்சிபோலீஸில் புகார் கொடுத்துள்ளார். அவர் பாஜகவினரால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இந் நிலையில் ஜார்க்கண்ட் ஆளுநரை உடனே டெல்லிக்கு வருமாறு ஜனாதிபதி அப்துல் கலாம் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து ராஸ் உடனே டெல்லி கிளம்பினார்.

இதற்கிடையே ஜார்க்கண்டில் மத்திய அரசும் கவர்னரும் சேர்ந்து ஜனநாயகப் படுகொலை செய்துவிட்டதாகக் கூறிஇன்றும் நாடாளுமன்றத்தில் பாஜகவினர் பிரச்சனை கிளப்பினர். இதனால் அமளி ஏற்பட்டதால் இரு அவைகளும்ஒத்தி வைக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+