புதுவை கண்ணன் "சஸ்பெண்ட்": காங். அதிரடி
டெல்லி:
புதுவையில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய அதிருப்தி கோஷ்டியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமானகண்ணன் காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
புதுவையில் ரங்கசாமிக்கு எதிராக சரமாரியாக ஊழல் புகார்களை சமீபத்தில் தெரிவித்த கண்ணன், ரங்கசாமிக்கு எதிராக நாளை புதுவையில்கண்டனப் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருந்தார்.
கண்ணனின் போக்கினால் அதிருப்தி அடைந்த ரங்கசாமி, தனது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாநில காங்கிரஸ் தலைவர்நாராயண சாமி ஆகியோருடன் டெல்லிக்குப் படையெடுத்தார்.
அங்கு நேற்று கட்சியின் பொதுச் செயலாளரும், புதுவை மாநில பொறுப்பாளருமான அம்பிகா சோனியை சந்தித்து புகார் தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து இன்று காலை சோனியா காந்தியைச் சந்தித்தும் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து கண்ணனை தற்காலிகமாக நீக்குவதாக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. மேலும் 1 மாதத்திற்குள்தனது செயல் குறித்து கண்ணன் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
கண்ணன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணனுக்கு ஆதரவாக உள்ள 2எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதனால் காங்கிரஸ் அரசுக்குஆபத்து ஏதும் ஏற்படாது.


Click it and Unblock the Notifications
