தமிழ் வளர்ச்சி வளாகம்: ஜெ. தொடங்கி வைத்தார்
சென்னை :
சென்னையில் தமிழ் வளர்ச்சி வளாகத்தை முதல்வர் ஜெயலலிதா தெடங்கி வைத்தார்.
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறைக்காகவும், தமிழ் வளர்ச்சி, பண்பாடுசார்ந்த துறைகளின் அலுவலகங்களுக்காகவும் ரூ. 6.27 கோடி மதிப்பில் ஏழு அடுக்கு மாடிகளுடன் தமிழ் வளர்ச்சிவளாகம் அமைக்கப்படுகிறது.
முதல் கட்டமாக ரூ. 2 கோடி மதிப்பில் பேஸ்மென்ட் தளம், தரைத்தளம், முதல் தளம் ஆகியவை கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. கட்டடப் பணிகள் தொடர்ந்து நடந்து வந்தாலும் இதுவரை கட்டி முடிக்கப்பட்ட வரையுள்ளதமிழ் வளர்ச்சி வளாகத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இத் திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் கல்வி, வணிக வரித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறைச்செயலாளர் இராமய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாரிமுனை குறளக வளாகத்தில் மாத வாடகையில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி இயக்கக அலுவலகம் இனி புதியகட்டடத்தில் இயங்கும்.
பேஸ்மென்ட் தளத்தில் தொல்லியல் துறையின் அச்சுப் பிரிவு, தரைத் தளத்தில் தொல்லியல் துறை இயக்ககம், முதல்தளத்தில் தமிழ் வளர்ச்சி இயக்ககம் ஆகியவை செயல்படும்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications