கோவா காங். அரசு அதிரடியாக டிஸ்மிஸ்; ஜனாதிபதி ஆட்சி அமல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கோவாவில் பெரும்பான்மையை நிரூபித்த சில மணிநேரங்களிலேயே காங்கிரஸ் அரசு அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டது. சட்டசபைமுடக்கப்பட்டு உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டது.

கோவா மாநில சட்டசபையில் மொத்தம் 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இங்கு எம்.எல்.ஏ.க்கள் அடிக்கடி அணி மாறியதால் ஆட்சிக்குநிலையான ஆதரவு இல்லாமல் இருந்தது. இந் நிலையில் பாஜக உறுப்பினர்கள் 3 பேர் ராஜினாமா செய்தனர்.

இதைத் தொடர்ந்து சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்ட்டது. அதில் பாஜக அரசு வெற்றி பெற்றது. ஆனாலும் மனோகர்பாரிக்கர் தலைமையிலான அரசை பிப்ரவரி 2-ந் தேதி ஆளுநர் ஜமீர் டிஸ்மிஸ் செய்தார். அடுத்த சில மணிநேரங்களிலேயே பிரதாப் சிங்ரானே தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றது.

இதைக்கண்டித்து பாஜக போராட்டம் நடத்தியது. ஒரு மாதத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்வர் ரானேவுக்குஆளுநர் உத்தரவிட்டார். இந் நிலையில் பாஜகவைச் சேர்ந்த சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோர் தங்களது பதவிகளைராஜினாமா செய்தனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. இதில் காங்கிரசுக்கு 16 ஓட்டுகளும், பா.ஜ.வுக்கு 16 ஓட்டுகளும்சரிசமமாக கிடைத்தன. இதையடுத்து தனது ஓட்டை அரசுக்கு ஆதரவாக தற்காலிக சபாநாயகர் பிரானசிஸ்கோ சர்தினா போட்டார். இதனால்ஒரு ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் அரசு வெற்றிபெற்றது.

முன்னதாக பாஜக ஆதரவு எம்.எல்.ஏ. ஒருவரை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள சபாநாயகர் அனுமதிக்கவில்லை.

இதற்கிடையே டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைச்சரவையின் அவசரக்கூட்டம் கூடியது. இதன் பிறகுநிருபர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில்,

ஒரு உறுப்பினரை ஓட்டுப்போட அனுமதிக்காமல் சபாநாயகர் தனது ஓட்டு மூலம் நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற வைத்து இருப்பதுசரியல்ல. சட்டசபை செயல்படாத நிலையில் பட்ஜெட்டை நிறைவேற்றவும், அரசியல் சட்ட நெருக்கடியைத் தவிர்க்கவும் கோவா அரசுடிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து அம் மாநில அரசு முடக்கி வைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+